27/10/2025

புதிய உலகைக் காண- நீ

 

புதிய உலகைக் காண- நீ
புவியில் உதித்த நாளே..
ஒளிரும் உலகைக் காண- நீ
வெளியில் குதித்த நாளே..
இதயம் இரண்டும் மகிழ- உன்
உதயம் நிகழ்ந்த நாளே...
இன்பம் எங்கும் பெருக- நீ
இறங்கி வந்த நாளே...
இனிய பிறந்தநாளே - இது
இனிய பிறந்தநாளே
இனிமை மிகுந்த நாளே- இது
இறைவன் கொடுத்த நாளே...
ஆலம் விழுது போலே
ஆழம் ஊன்ற வாழ்க
ஞான வேதம் போலே
ஞாலம் ஆள வாழ்க
அன்பும் அறமும் சேர்ந்த
பண்பைப் போற்றி வாழ்க
தன்மை மேலும் உயர
தமிழைப் போற்றி வாழ்க
வாழ்க வாழ்க வாழ்கவே
நீண்ட காலம் வாழ்க
வாழ்க வாழ்க வாழ்கவே
நீண்ட காலம் வாழ்க
பிறந்தநாள் வாழ்த்துகள்
பிறந்தநாள் வாழ்த்துகள்

No comments: