அனைவருக்கும் வணக்கம் உறவுகளே!
எனக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக ஒரு மிகப்பெரிய விபத்தில் என் நெஞ்சாங்கூட்டில் முன்னும் பின்னும் உள்ள சில விலா எலும்புகளும், மேலே உள்ள பெரிய எலும்பும் உடைந்துவிட்டது வலதுகை மூட்டும் இறங்கிவிட்டது. டைட்டானியம் தகடுவைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கைகளைத் தூக்க முடியாமலும் முதுகையே தூக்க முடியாமலும் மிகவும் சிரமப்பட்டேன்.
ஒரு வழியாக மருத்துவர்களின் வழி காட்டுதலில் சிகிச்சை செய்த இடம் சரியானாலும் கைகளைத் தூக்க முடியுமா என்கிற சந்தேகம் மட்டும் எனக்குள் இருந்தது. ஆனால் என்றைக்கு Dr. ஐயப்பன் MPT, அப்பல்லோ அவர்களைப் பார்த்தேனோ அவரளித்த பிசியோவில் ஐந்தே நாட்களில் ஏறக்குறைய அனைத்தையுமே சரிசெய்து என் பழைய வாழ்க்கையை மீட்டி விட்டார்கள். உண்மையில் பிசியோ தெரபி செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் தேவையென்ன என்பதை முழுவதுமாக உணர வைத்து விட்டார்கள். அவர்களுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் அது அவர்களின் சேவைக்கு ஈடாகாதுதான். இருப்பினும் யாம் என்ன செய்துவிடமுடியும்?!!..ஏதோ என்னால் முடிந்த ஒன்று இந்தப் பதிவு மட்டுமே என்று கூறி அவர்களின் சேவை மேலும் மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனையும் அவர்களுக்கு நிகரான மருத்துவர்களையும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்க வளமுடன்!
அன்புடன்,
செ. இராசமாணிக்கம்.
நான் யார் என்பதைத் தெரிந்து கொண்டு ஆசிரியர் பெருமாள் நல்லமுத்து எழுதிய வேலி மற்றும் வரம் என்கிற நூல்களை எமக்கு மருத்துவர் ஐயப்பன் அவர்கள் பரிசாக வழங்கினார்கள் என்கிற கூடுதல் தகவலையும் வழங்கி மகிழ்கிறேன்.
(அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் பற்றி பிறகு எழுதுகிறேன்)

No comments:
Post a Comment