20/10/2025

பைசன்

 


மாரி செல்வராஜ்
என்னும் படைப்பாளி
மாறி எடுக்கமாட்டார்
என்னும் சூத்திரத்தை
அவரே கொஞ்சம் மாற்றியும்
அதேசமயம் மாறாமலும் எடுத்த
அற்புதமான படைப்பென்றால்
அது இந்த "#பைசன்"தான்...

ஆம்...
இங்கேயும்
இருந்த பேதத்தைத்தான்
இப்போதும் சொல்கிறார்; எனினும்
இடதுபக்கம் இருந்துள்ள
இதய பக்கத்தையும் காண்பிப்பதால்
இப்படைப்பு
இடது வலதின்றி
எல்லோருக்கும் ஆனதாகிறது.
பாராட்டுகள் இயக்குநரே!

காதலைக் காட்டிய விதமும்
காதல் எதிர்ப்பைக் காட்டிய விதமும்
புதுமை; அருமை!
சாமியாட்டமோ
கபடியாட்டமோ
எல்லா ஈகோவும்
சாதி ஈகோபோல்
களைய வேண்டியதே என்பதைக்
கருத்தாய்ப் பதிவு செய்கிறார்!

சமீப நாட்களாக
இசை என்னும் இடத்தில்
இரைச்சலே இருந்ததென்னும் குறை
இப்படத்தில் நீங்கியது...
இசை அருமை...
பாடல்கள் அருமை என்றாலும்
பாடலாசிரியர் வேலையையும்
இயக்குநரே எடுத்துக் கொள்வதை
வரவேற்க முடியாதுதான்?!
காரணம்.....
அட அதையாவது விட்டுவைங்கப்பா..

#பசுபதி
கண்டிப்பாக அவருக்கு விருது உண்டு

#துருவ்விக்ரம்
படத்திற்குத் தேவையான நடிப்பு

#அமீர் & #லால்
வயிற்றில் புளியைக்கரைக்கும் தோற்றம்

இவர்கள் படத்தில்
குறியீடு இல்லாமலா?
இப்போதுதான் பொருந்துகிறது
#ஜப்பானில்_புத்தர்_சிலை‌..

கபாடி போட்டியைக்
காட்டிய விதமும்
உள்ளூர் பகை முதல்
உலகப் பகைவரை காட்டி
அனைத்தையும் தன் திறமையால்
அடித்து நொறுக்கி
உயரமாய் உயர்ந்து நிற்பதே
உன்னத வெற்றியென்று
ஓங்கி உரைத்த பைசன்
உண்மையில் நல்ல படமே...

✍️செ. இராசா

9.5/10

No comments: