பார்க்க வாறோம் ஐயப்பா-உங்களைப்
பார்த்துப் பாவம் தொலைக்க வாறோம் ஐயப்பா...
சாமி பாதம் சரண பாதம் ஐயப்பா
எங்கள-
தாங்குஞ் சாமி தரணியில நீயப்பா
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
சாமி சரணம் ஐயப்ப சரணம்
ஐயப்ப சரணம் சாமி சரணம்
சாமியேய்....சரணம் ஐயப்பா
#சரணம்-1
மலையாளும் எங்க சாமி ஐயப்பா
மனசார நோன்பிருந்து வாரோம்பா
நிலையான உன்னவிட்டா யாரப்பா?
நிசமாக உள்ளவனே நீயப்பா
அலைமோதும் இந்த வாழ்க்கை பாரப்பா?
கரையேறிப் போக வழி செய்யப்பா.
பிழையான பிள்ளை இங்கே நானப்பா-என்
பிழைநீக்கும் குருவாக வாயேன்பா!
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
சாமி சரணம் ஐயப்ப சரணம்
ஐயப்ப சரணம் சாமி சரணம்
சாமியேய்....சரணம் ஐயப்பா
#சரணம்-2
கார்த்திகையில் மாலையிட்டே ஐயப்பா
கானகத்தத் தேடிவாறோம் ஐயப்பா
பேட்டைத்துள்ளி ஆட்டமாடி ஐயப்பா
பெருவழியில் ஓடிவாறோம் ஐயப்பா
பம்பையில குளிச்சிப்புட்டு ஐயப்பா
நீலி மலைத் தாண்டிவாறோம் ஐயப்பா
சந்நிதானம் தேடிவாறோம் ஐயப்பா- உன்
தரிசனத்தில் மெய்சிலிர்த்தோம் ஐயப்பா
ஐயப்பா நீயே மெய்யப்பா
ஐயப்பா நீதான் மெய்யப்பா
தேகபலம் தா ஐயப்பா
வாழவரம் தா ஐயப்பா
புலிவாகனனே ஐயப்பா
சிவமாதவனே ஐயப்பா
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
சாமி சரணம் ஐயப்ப சரணம்
ஐயப்ப சரணம் சாமி சரணம்
சாமியேய்....சரணம் ஐயப்பா
செ. இரா

No comments:
Post a Comment