15/10/2025

பாடி திருவில்லீஸ்வரர் கோவில்

 

எங்கும் இருப்பவனே!
‌‌.......என்னுள் உறைபவனே!
திங்கள் குணத்தவனே!
‌.......தேவனே- ரங்கனே!
ஆதியே! அந்தமே!
‌......அன்னையே! தந்தையே!
நீதியே! யாவுமே!
...,..நீ
(1)
ஒளியே! மொழியே!
.......உயிரே! உடலே!
துளியே! கடலே!
........சுவையே!- தெளிவே!
பதியே! மதியே!
........பகலே! இரவே!
விதியே! வினையே!
.........நீ!
(2)
தமிழே! அழகே!
....சறுகே! தளிரே!
உமியே! உலகே!
....உருவே!- அமுதே!
கனவே! நனவே!
....கருவே! கவியே!
மனமே! மணமே!
.....வா!
(3)
✍️செ. இராசா
இடம்: பாடி திருவில்லீஸ்வரர் கோவில்

No comments: