11/10/2025

உண்மை உணர்ந்துவிட்டேன்

 

ஒற்றை விபத்தின்பின்
........உண்மை உணர்ந்துவிட்டேன்!
மற்றோர் பிறவியிதை
.........நன்றாக- உற்றுணர்ந்தேன்!
சுற்றுமும் நட்புமதில்
.........சொந்தத்தை நன்குணர்ந்தேன்!
கற்றதை வைத்தெழுவேன்
.........காண்!

ஒற்றை நொடிப்பொழுதில்
......ஊழ்வினை ஓடிவர
அற்பமோ அற்புதமோ
......ஆகலாம்- உற்றுணர்ந்தே
செய்யும் செயலறிந்து
......செய்வினை ஆற்றினால்
தெய்வம் விளைவளிக்கும்
......சேர்த்து!

பட்ட அடியில்
.....பயங்கரம் மற்றோர்;கண்
பட்ட அடியிதுவே
......பட்டாலும் - பட்டென்றே
விட்டு விலகிடவே
......வேதனைகள் ஓடிடவே
எட்டிப் பிடிப்பேன்
.......இலக்கு!

No comments: