விளையாட்டாய் ஆரம்பித்து
கலையோட்டமாய்ப் பரிணமித்து
தலைகாட்டவே போராடி
நிலைநாட்ட படும் பாடுள்ளதே;அது
பட்டவர்களுக்கேத் தெரியும்; அடி
பட்டவர்களுக்கேப் புரியும்!
எத்தனை உழைப்பு?
எத்தனை இழப்பு?
எத்தனை விரயம்?
எத்தனை வினையம்?
எவ்வளவு காலம்?
எவ்வளவு தூரம்?
எவ்வளவு தடைகள்?
எவ்வளவு கதைகள்?
மூச்சு முட்டுகிறது; நினைத்தாலே
வேர்த்துக் கொட்டுகிறது!
நுனி இலையில்
தவறவிட்டவனே அறிவான்!
சிறிது என்பது
சிறிதல்லவென்று...
இதோ இதோவென்று
இழுபட்டவனே அறிவான்!
இதுவும் கடந்து போகும்
இதோவென்று..
அங்கீகாரம்...
அந்த ஒன்றுக்காகத்தானே எல்லாம்
ஆனால்;
அது யாருக்குக் கிடைக்கிறது?
பசியில் உழல்வோனுக்கு
உணவு தானே அங்கீகாரம்?!
பார்வை இல்லாதவனுக்குக்
கண்கள் தானே அங்கீகாரம்?
அதேபோல்...
காலத்தில் கிடைப்பது தானே
உண்மையான அங்கீகாரம்!
செவிடானபின்
செவியொலிப்பான் எதற்கு?!
பசிபோனபின்
அன்னதானம் எதற்கு?
ஆனாலும்
இறந்தபின் வரும்
பாரத ரத்னாபோல்
மரணித்த பின் வரும்
மகாகவி பட்டம்போல்
சில அங்கீகாரங்களும்
தேவைதான் போல...
இதோ; எம்
அரும் முயற்சிக்கு வந்த
வெறும் 100 டாலர் காசோலைபோல..
செ. இராசா
எல்லாம்வல்ல இறைவன் அருளால் ....
இந்த வெற்றிக்காகப் பெரிதும் உதவிய
இறையருளுக்கும் அனைத்து உறவுகளுக்கும் இரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
![]()
நன்றி நன்றி உறவுகளே...![]()
![]()
![]()





