16/10/2025

நம் நாட்டோட நிலையப் பாரு பொதுஜனமே

 

நம் நாட்டோட நிலையப் பாரு பொதுஜனமே
ஆமாம் பொதுஜனமே
நம்ம பொதுஜனமே
நம்ம பொதுஜனமே
அதப் பார்த்தாலே வலிக்குமுங்க உங்க மனமே
ஆமாம் உங்க மனமே
ஆமாம் உங்க மனமே
மாறி மாறி ஆண்ட பின்னும்
மாற்றமிங்கே காண வில்லை
ஏறும் விலைவாசி மட்டும்
ஏனோ இன்னும் குறையவில்லை
நம் நாட்டோட நிலையப் பாரு பொதுஜனமே
ஆமாம் பொதுஜனமே
நம்ம பொதுஜனமே
நம்ம பொதுஜனமே
மதுஇல்லா மாநிலமா மாத்துறதா சொல்லுறதும்
ஆளுங்கட்சி ஆனபின்னே அப்படியே மறப்பதுவும்
நீட்டவச்சி மொழியவச்சி நீட்டிநீட்டி முழங்குறதும்
கோட்டையில அமர்ந்தபின்னே ஒன்றியம்னு திட்டுறதும்
சாதிப்பேரை நீக்கிப்புட்டா சாதிநீங்கும் என்பதுவும்
நாதியத்த சனங்களுக்கே‌ நாங்கதான்னு சொல்வதுவும்
இன்னுமின்னும் எத்தனைநாள் இப்படியே போகுமோ
#குழு: இன்னுமின்னும் எத்தனைநாள் இப்படியே போகுமோ
நம் நாட்டோட நிலையப் பாரு பொதுஜனமே
ஆமாம் பொதுஜனமே
நம்ம பொதுஜனமே
நம்ம பொதுஜனமே
✍️செ‌. இராசா

No comments: