வாடிவாடி வாடிவாடி
.....வதங்குகின்ற மாந்தரே!
தாடிவைத்துத் தாடைமேலே
.....தடவசோகம் தீருமோ!
ஓடியாடி ஓடியாடி
......ஒதுங்குகின்ற போதிலே!
நாடிநாடி வந்தகூட்டம்
.......வருவதுண்டோ நேரிலே!
ஊடிஊடி தன்னிலூடி
....உண்மைகண்ட யாருமே!
தேடியோடி தீரவோடி
....தேய்வதில்லை பாருமே?
ஆடிபோக ஆனிபோகும்
.....ஐயமென்ன கூறுமே?!
நாடிவேகம் போகுமுன்னே
.....நன்மைசெய்ய வேண்டுமே!
செ. இராசா

No comments:
Post a Comment