இருளைக் கிழித்து
......விடியலைக் கொடுக்கும்
...........இவளே காந்திமதி!
உரிமைக் காக
.......ஓங்கி ஒலிக்கும்
...........குரலே காந்திமதி!
தனக்கென இன்றி
......பிறர்க்கென நினைக்கும்
.............உறவே காந்திமதி!
அழகிய பாதையை
........அமைத்துக் கொடுக்கும்
..............அறிவே காந்திமதி!
நல்லவை நடந்திட வேண்டும்
அல்லவை விலகிட வேண்டும்
மெலியவர் குரல்வளை
...நெறித்திடும் கரங்களை
.......உடனே தடுத்திட வேண்டும்!
வலியவர் விரித்திடும்
....வலைகளை அறுத்தே
.......தலைமுறை உயர்ந்திட வேண்டும்!
அதைத்தருபவள் காந்திமதியே
அவளால் மாறிடும்விதியே....
காந்திமதி...காந்திமதி....காந்திமதி
காந்திமதி...காந்திமதி....காந்திமதி
No comments:
Post a Comment