வார்த்தைகளைத் தட்டித் தட்டி
வார்த்தெடுத்த சிற்பி!
வரிகளைக் கட்டிக் கட்டி
வரிகட்டிய^ பாவலன்!
இராமானுஜனைப் பாடிய
இரங்கராஜன்!
இரண்டு
இராமச்சந்திரன்களையும்*
எழுத்தால் உயர்த்திய
அவதார புருஷன்!
சிவாஜிக்கும் எழுதி
சிவாவுக்கும்** எழுதிய
வாலிபப் புலவன்!
மயக்கமா கலக்கமாவால்
மயக்கம் தெளிந்ததை
அரிச்சந்திரனாய் விளம்பிய
அரி பக்தன்!
பாரத காவியத்தை
பாண்டவர் பூமியாக்கி
பாமரனையும்
படிக்க வைத்தப் பண்டிதன்!
எந்த ஏகலைவனிடமும்
விரல் காணிக்கை கேட்காத
ஆச்சாரியன்!
திருவரங்கம் அருளிய
.....கவியரங்கம்!
திருக்குவளை விரும்பிய
.....தமிழ்ப்பலகை!
போலச் செய்தப்
போலிகள் முன்னே; பிறர்
வாழச் செய்த கவிஞன்
வாலி!
வாலி- நீர்
வாழி!
செ. இராசா
^Tax
*MGR & ராமர்
**மிர்ச்சி சிவா
29/10/2025
வாலி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment