09/10/2025

வெக்காளி அம்மா

 

வெற்றிதரும் இறையுருவே
.......வெக்காளி அம்மா!
..வேண்டியுனை வருகின்றோம்
‌.............பாரும் அம்மா!

சுற்றமெல்லாம் வியந்திடவே
.....ஓம்காளி அம்மா!
..சூழலது மாறிடவே
‌..............வேண்டும் அம்மா!

பற்றியுணைப் பணிகின்றோம்
........வெக்காளி அம்மா!
...பாரமது நீக்கிடவே
.................வாரும் அம்மா!

உற்றபலன் கொடுப்பவளே
........ஓம்காளி அம்மா!
..உள்ளமதில் உறைபவளே
‌..........நன்றி அம்மா!

No comments: