02/04/2024

12TH FAIL

 



என்ன இது?
எதிர்மறைத் தலைப்பு
இப்படித்தான் யோசித்தேன்
இப்படம் பார்க்கும்முன்...
பார்த்தவுடன்தான் தெரிந்தது
இது வெறும் படமல்ல; பாடமென்று!

ஆம்..‌

DSP தேர்வுக்கும்
IPS தேர்வுக்குமே வேறுபாடு தெரியாத
ஓர் குக்கிராமத்து இளைஞன்
அதுவும் 12 ஆம் வகுப்பில்
ஒருமுறை தோல்வியடைந்த ஒருவன்
எப்படி டெல்லி வரை சென்று
IPS ஆகிறான் என்பதே கதை!

நீண்ட நாட்களுக்குப்பிறகு
நான் பார்த்த படங்களிலிலேயே
மிகவும் உருக்கமான படமென்றால்
நிச்சயமாக இதைத்தான் சொல்வேன்!

காரணம்..
படம் பார்ப்பவர்களும்
படத்தில் உள்ளவர்களும்
ஒன்றுதோனா எனத்தோன்றும் உணர்வை இப்படம் ஏற்படுத்தியதால்;

இப்படத்தில் எத்தனையோ காட்சிகள்
உயிரை உலுக்குகின்றன..
உதாரணமாக;

நேர்மைக்கு மதிப்பில்லையோ என
நொந்து நூடுல்ஸாகும் தந்தையை
தேற்றும் தமையனின் காட்சி...

கதவைச் சாத்திவிட்டு
பணத்தைக் கொடுத்தனுப்பும்
அந்த அப்பத்தாவின் காட்சி...

ஊரைவிட்டு ஊர்வந்து
பையைத் தொலைத்துவிட்டு
பரிதவிக்கும் காட்சி...

தன்மானத்திற்கும் பசிக்கும்
இடையில் போராடி
பசியே வெல்கின்ற காட்சி...

பரமபத அட்டையை வைத்து
IPS தேர்வு முறையை
அதிஅற்புதமாக விளக்கும் காட்சி

திரும்பி வந்த மகனுக்கு
தலையில் எண்ணெய் தேய்த்தவாறே
மாடுவித்த கதையை
மாற்றிப்பேசும் அம்மாவின் காட்சி..

தேர்வில் தோல்வியடைந்த வலியில்
தன்னைப்பற்றி கேட்காமல்
தன் காதலியைப்பற்றிக் கேட்ட
நண்பனைக் கேவலப்படுத்தும் காட்சி...

பொந்துபோன்ற அறையில்
மாவறைக்கும் வேலையும் பார்த்து
அதற்குள்ளேயே படிக்கும் காட்சி...

நேர்முகத் தேர்வில்
12ஆம் வகுப்புத் தோல்விபற்றி
மறைக்காமல் கூறுவதால்
அதனால் நேருகின்ற காட்சி...

இப்படி ஒவ்வொரு காட்சியாக விரிந்து
இது உண்மைக் கதையென்று
அனைவரையும் காட்டுகிற காட்சியை
என்னவென்று சொல்வேன்?!
ஆகா...ஆகா..
அதை அனுபவியுங்கள்
உங்களுக்கேப் புரியும்‌.

இதுபோல்
கதையம்சம் உள்ள படங்கள்
தமிழிலும் வரவேண்டும்‌தான்
என்ன செய்வது?!
இங்கே நாம எடுத்தா ஓடனுமே...?!!

✍️செ. இராசா

திரு. OPS ஐயாவிற்கான பிரச்சாரப் பாடல்


பல்லவி
தென்நாட்டுப் பெருமைகாக்கும்
தன்மானத் தமிழருங்க
அம்மாவின் ஆசிபெற்ற
உண்மையான தலைவருங்க...
அன்பால ஆட்சிசெஞ்ச
மக்களோட முதல்வருங்க..
நம்நாட்டுப் பெருமைகாக்க
நாமவோட்டுப் போடனுங்க...

உரிமைக்குக் குரல்கொடுக்கும் தலைவரு- ஐயா
ஓபிஎஸ்ஸூ ஜல்லிக்கட்டு நாயகரு!

யாரு யாரு யாரு இங்கே ஜெயிக்கிறது யாரு...
வேற யாரு நம்ம ஐயா
ஓபிஎஸு பாரு...

யாரு யாரு யாரு சின்னம் ஜெயிக்குமுனு கூறு...
தாறு மாறு வெற்றிதரும்
பலாப்பழம் பாரு..

உங்கள் சின்னம் பலாப்பழம்
எங்கள் சின்னம் பலாப்பழம்
வெல்லும் சின்னம் பலாப்பழம்
நமது சின்னம் பலாப்பழம்

சரணம்-1
பாரதப் பிரதமரின் பாசமான நட்பவச்சு
பாலையா இருக்குமிந்த மண்ணைமீட்க வாராரு

மீனவ உறவுகளின் வேதனையப் புரியவச்சு
நேசக் கரங்கொடுக்க பன்னீரய்யா வாராரு

சூழ்ச்சி வலைபின்னி சூதுகவ்வி இருந்தாலும்
வீழ்ச்சி அடையாம வீறுகொண்டு வாராரு

அம்மா மனசுபோல ஆட்சியில இருந்தபோதும்
அன்பால் அரவணைச்ச பன்னீரய்யா
வாராரு ...

யாரு யாரு யாரு இங்கே ஜெயிக்கிறது யாரு...
வேற யாரு நம்ம ஐயா
ஓபிஎஸு பாரு...

யாரு யாரு யாரு சின்னம் ஜெயிக்குமுனு கூறு...
தாறு மாறு வெற்றிதரும்
பலாப்பழம் பாரு..

உங்கள் சின்னம் பலாப்பழம்
எங்கள் சின்னம் பலாப்பழம்
வெல்லும் சின்னம் பலாப்பழம்
நமது சின்னம் பலாப்பழம்...
 

சரணம்-2
தாரை வார்த்துதந்த தமிழ்நாட்டின் கட்சத்தீவ
தானைத் தலைவர் தானே மீட்டெடுக்கப் போராரு ...

தண்ணீர் பிரச்சினைய சுத்தமாகத் தீர்த்துவைக்க
தங்கத் தலைவர் இங்கே எழுச்சி கொண்டு வாராரு ...

தொகுதி முழுவதுமே சுற்றிவரும்
தலைவரோட
தகுதி அறியாம ஒதுக்கிவச்ச எதிரிகளை
...
கொட்டம் அடங்கும்படி கூறுகின்ற தேர்தலுல
நட்டம் நமக்கில்லை நடக்குறதப் பாருங்க...

யாரு யாரு யாரு இங்கே ஜெயிக்கிறது யாரு...
வேற யாரு நம்ம ஐயா
ஓபிஎஸு பாரு...

யாரு யாரு யாரு சின்னம் ஜெயிக்குமுனு கூறு...
தாறு மாறு வெற்றிதரும்
பலாப்பழம் பாரு..

உங்கள் சின்னம் பலாப்பழம்
எங்கள் சின்னம் பலாப்பழம்
வெல்லும் சின்னம் பலாப்பழம்
நமது சின்னம் பலாப்பழம்...

01/04/2024

Who will cry when you die?----இறக்கையில் யாரழுவார்


 

இறக்கையில் யாரழுவார்
.....என்கின்ற நூலை
இறக்கும்முன் வாசியுங்கள்
.....என்பேன்- மறவாதீர்!
ஆங்கிலநூல் ஆனாலும்
.....ஐநூறில் பாதிதான்
வாங்குங்கள் கட்டாயம்
.....வந்து!

✍️செ. இராசா
நூல்: Who will cry when you die? 

ஆசிரியர்: Robinsharma 

விலை: #235

27/03/2024

எல்லாப் புகழும் இறைவனுக்கே

 


#பல்லவி
எல்லாப் புகழும் இறைவனுக்கே
எல்லாம் அண்ணல் நபிகளுக்கே
எல்லாப் புகழும் இறைவனுக்கே
எல்லாம் அண்ணல் நபிகளுக்கே

புகழ்
மாயையில் பாதையை மாற்றாதே- அது
நாயகன் அருளென மறவாதே...
நானென நானென சொல்லாதே..

அவ; னாலின்றி அணுவும் அசையாதே

எல்லாப் புகழும் இறைவனுக்கே
எல்லாம் அண்ணல் நபிகளுக்கே...
(புகழ்...)

#சரணம்
அல்லா என்ற
சொல்லால் இன்னல்
இல்லா தென்று போகாதோ...
அல்லா என்ற
சொல்லால் இன்பம்
எல்லாம் வந்து சேராதோ..

வேதம் காட்டும் வழியினிலே
சென்றால் வெற்றி வாராதோ
ஞாலம் போற்றும் நெறியினிலே
நின்றால் யாவும் சேராதோ

எல்லாப் புகழும் இறைவனுக்கே
எல்லாம் அண்ணல் நபிகளுக்கே...

✍️செ. இராசா


25/03/2024

வாருங்கள் வாருங்கள் அல்லாஹ்வை நாடி...


வாருங்கள் வாருங்கள்
அல்லாஹ்வை நாடி...
நம்பினோர் யாவருக்கும்
அல்லாஹ்வே நாதி...
கேளுங்கள் கேளுங்கள்
குர்ஆனை ஓதி...
கேட்டதைக் கொடுப்பதுவே அல்லாஹ்வின் நீதி...

நாடுங்கள் அல்லாஹ்வை நாடுங்கள்
கேளுங்கள் நெஞ்சாரக் கேளுங்கள்
ஓதுங்கள் குர்ஆனை ஓதுங்கள்
கூறுங்கள் நன்றியைக் கூறுங்கள்

இரவும் பகலும் கலந்ததுதான்
இந்த நாட்கள் எனினும்
இரவில் இருளும் வரும்பொழுதே
விளக்கைத் தேடும் மனது..

இன்பம் துன்பம் கலந்ததுதான்
இந்த வாழ்க்கை எனினும்
துன்பம் பெரிதாய் வரும்பொழுதே
இறையைத் தேடும் மனது

கூறுவோமே அல்லாவின் நாமம்
தேடுவோமே அல்லாவை நாளும்..
போகாதே போகாதே மாறான பாதை..
தேடாதே தேடாதே எப்போதும் தீதை

இரமலான் புனித இரமலான்
இரமலான் புனித இரமலான்

✍️செ. இராசா

23/03/2024

மெட்டு: ஒயிட்லகான்.....ஐபிஎல்லப் பார்க்கக் கூட்டம் கூடுது-

 


(மெட்டு: ஒயிட்லகான்)

ஐபிஎல்லப் பார்க்கக் கூட்டம் கூடுது- அதப்
பார்க்க சொல்ல மஜாவாத்தான் இருக்குது...(3)
சிக்ஸர் ஃபோரு அடிச்சா விசில் பறக்குது...அதுக்கு
சீயர்ஸ் கேர்ள்ஸ் ஆடயிலத் துடிக்குது...

ஏய் டோனி கோலி பாருடா
நம்ம டோனிபோல யாருடா
இவன் சிஸ்கேயின் சிங்கன்டா
இவன் நின்னாப் பந்துத் தெறிக்குன்டா..‌

ஹோய்...ஹோய்...

ஐபிஎல்லப் பார்க்கக் கூட்டம் கூடுது- அதப்
பார்க்க சொல்ல மஜாவாத்தான் இருக்குது...

மச்சான் மச்சான் மச்சான் மச்சான் ஞானம்
இந்த RCB தாண்டா உண்மையில பாவம்.....(2)
பொம்பளங்க கிரிக்கெட்டுல கப்படிச்ச டீமான்டாம்..
ஆம்பளங்க கிரிக்கெட்டுல
ஐயாபாவம் கிட்டலடா...
டெல்லி மும்பை பஞ்சாப்பெல்லாம் சிரிக்குது- இப்ப
கோலி என்ன செய்யுறான்னு கேக்குது...

ஐபிஎல்லப் பார்க்கக் கூட்டம் கூடுது- அதப்
பார்க்க சொல்ல மஜாவாத்தான் இருக்குது...

✍️செ. இராசா

தமிழச்சி தமிழச்சி தமிழச்சி

  


#பல்லவி

யாரு யாரு வெல்வதாரு?
இதுல என்ன டௌட்டு..
தாறு மாறு ஓட்டிங்கில
ஜெயிப்பதுதான் வெயிட்டு

மாறி மாறிப் போகுதுங்க
எதிரணியின் கூட்டு
வேற மாறி வெல்லுமுங்க
தளிபதியின் ரூட்டு

யாரென்ன சொன்னாலும்
அக்காவுக்கே ஓட்டுங்க...
யாரெதிர் நின்னாலும்
டெப்பாசிட்டே டௌட்டுங்க....

#சரணம்_1
கலைஞரே பேருவச்ச
அக்காசிறப்பக் கேளுங்க
கவிஞரா மின்னியவர்
கலக்குறாருப் பாருங்க..

அதிரடியாகப்பேசி
அசத்துறது யாருங்க
தளபதி அனுப்பிவச்ச
தமிழச்சிதான் பாருங்க

சாதிமதத்தைச் சொல்லி பிரிக்கிறது யாருங்க?
நீதிபுகட்ட எண்ணி போடவேணும் ஓட்டுங்க...

மோதிஜெயிக்க இங்கே பேசுவதைக் கேளுங்க..
நீதிஜெயிக்க எண்ணி நம்மயாரு காட்டுங்க....

யாரென்ன சொன்னாலும்
அக்காவுக்கே ஓட்டுங்க...
யாரெதிர் நின்னாலும்
டெப்பாசிட்டே டௌட்டுங்க....

#சரணம்_2
தமிழினம் வாழ்த்துகின்றத்
தங்கமகள் யாருங்க?
தென்னகப் பெருமைகொண்ட
சிங்கமிவர் தானுங்க..

சென்னையில் வெற்றிகண்ட
தமிழச்சினா யாருங்க?
நம்மினம் நிமிரவச்ச
கழகத்தோட தூணுங்க...

மாநில உரிமை காக்க நாமவெல்ல வேணுங்க
மாறிடும் சூழ்நிலைய நினைச்சு வோட்டப் போடுங்க
நாட்டையே அடகுவச்ச மோசமான கூட்டங்க
நாமதான் தடுக்கவேணும் சின்னம் பார்த்து போடுங்க
....நம்ம சின்னம் பார்த்துப் போடுங்க!

யாரென்ன சொன்னாலும்
அக்காவுக்கே ஓட்டுங்க...
யாரெதிர் நின்னாலும்
டெப்பாசிட்டே டௌட்டுங்க....

#கோரஸ்
தென்சென்னை என்றாலே யாரு
... தமிழச்சி அக்கான்னு பேரு
வீரத்தின் அடையாளம் யாரு?- அதைப்
...பாராளு மன்றத்தில் பாரு
கழகத்தின் பெண்சிங்கம் யாரு?
...எங்கக்கா தமிழச்சி பேரு- நம்ம
கழகத்தின் பெண்சிங்கம் யாரு?
...எங்கக்கா தமிழச்சி பேரு

.✍️செ. இராசா

கோரஸ்
தமிழச்சி தமிழச்சி தமிழச்சி
தன்மானம் உள்ள தமிழச்சி
தமிழச்சி தமிழச்சி தமிழச்சி
நன்ஞானம் உள்ள தமிழச்சி
 
பல்லவி
எத்தனையோ பேரிருந்தும்
இங்கே யாரு தமிழச்சி..
சத்தியமா சொல்லுறேங்க
அக்காதாங்க தமிழச்சி..
முத்தமிழ்க் கலைஞரோட
பிள்ளைபோல தமிழச்சி...
 
சத்தியமா சொல்லுறேங்க
அக்காபேரு தமிழச்சி
அக்கா போல யாரு?- நம்ம
அக்கா சூப்பர் ஸ்டாரு...
அக்கா போல மாசு?- இங்கே
அக்கா தாண்டா கிரேசு
 
சரணம்-1
டெல்லி கிடுகிடுங்கும் அக்கா நிதி கேட்டா..
அள்ளி கொடுத்திடுங்க எல்லாத்தையும் நீட்டா..
தொகுதி பரபரக்கும் அக்கா இங்கே வந்தா...
பகுதி தலைநிமிரும் பக்காவாக நண்பா..
 
அக்கா போல யாரு?- நம்ம
அக்கா சூப்பர் ஸ்டாரு...
அக்கா போல மாசு?- இங்கே
அக்கா தாண்டா கிரேசு
 
சரணம்-2
தலைமைப் படிஉயரும் அக்காபதில் சொன்னா
கலைஞர் புகழுயரும் தமிழச்சியா நின்னா...
எதிரிப் படைநடுங்கும் அக்காபேரக் கேட்டா
உதிரிக் கட்சியெல்லாம் உக்காருண்டா சொம்மா
 
அக்கா போல யாரு?- நம்ம
அக்கா சூப்பர் ஸ்டாரு...
அக்கா போல மாசு?- இங்கே
அக்கா தாண்டா கிரேசு
 
✍️செ. இராசா

22/03/2024

லாஇலாஹா இல்லல்லாஹ்

 


லாஇலாஹா இல்லல்லாஹ்
எல்லாம் அவனாலே
லாஇலாஹா இல்லல்லாஹ்
வெல்வோம் அருளாலே

வேதம் தந்தானே-வெல்லும்
மார்க்கம் தந்தானே
யாதும் தந்தானே-இங்கே
எல்லாம் அவனாலே...

ஆதம் தந்தானே -அண்ணல்
நபியைத் தந்தானே
காலம் எல்லாமே-யாவும்
அல்லாஹ் அருளாலே..

இரமலான் வந்தாலே- நோன்பு
நோற்கும் செயலாலே...
தீமை எல்லாமே- தீரும்
தீனின் வழியாலே...

✍️செ.இராசா

21/03/2024

பிழைப் பத்து -----குறள் வெண்பாக்கள்

 #பிழைப்_பத்து
#குறள்_வெண்பாக்கள்

இத்தனைநாள் ஆனபின்னும் இன்னும் பிழையென்றால்
எத்தனைநாள் வேண்டும் இதற்கு?!
(1)

செய்த பிழையையே செய்கின்றோம் என்றானால்
செய்வதில் என்ன சிறப்பு?
(2)

ஒற்றுப் பிழையென்றால் ஓரள(வு) ஏற்றிடலாம்
முற்றும் பிழையென்றால் நோவு!
(3)

தப்பின்றி செய்தால் சரியென்று சொல்லாதோர்
தப்பிழைத்தால் சொல்லிடுவர் தப்பு!
(4)

உயரத்தில் நிற்போரின் ஒற்றைப் பிழையும்
துயரம் கொடுக்கும் தொடர்ந்து!
(5)

சிறுபிழை தானென்று சிந்திக்க வேண்டாம்
சிறுபொறியில் காடழியும் சேர்ந்து!
(6)

தளைதட்டும் பாட்டெழுதித் தந்திடுவோம் என்றால்
தலைநிமிரும் பேருண்டா சொல்?
(7)

எழுதுவோர் கண்களுக்(கு) எட்டாப் பிழையைக்
கழுகுபோல் கண்டிடுவர் காண்!
(8)

மீண்டும் முயல்கின்றோம் மீண்டும் தவறென்றால்
மீண்டும் முயன்றிடுவோம் மீண்டு!
(9)

எழுத எழுதத்தான் ஏற்றமுறும் என்றால்
எழுத்தைத் தவம்போல் எழுது!
(10)

✍️செ. இராசா

தேர்தல் வந்தததும் உடனே தேடி வருகுறான்

 


தேர்தல் வந்தததும் உடனே
தேடி வருகுறான்..
ஓட்டு போட்டதும் நமக்கே
வேட்டு வக்கிறான்...
வேற வழியில்லை தெரிஞ்சே
ரூட்ட மாத்துறான்...
யாரும் சேர்க்கல கேட்டா
கூட்டணிங்குறான்....

நேர்மையானவன் இங்கே
யாரு சொல்லுங்க..
நேரவந்துதான் உடனே
சரக்கத் தள்ளுங்க..
நீட்டு கேட்டுன்னு நீட்டா
நேக்கு பண்ணுங்க..
மாத்தி மாத்தியே நீங்க
ஆள வேணுங்க...

குடியக் காக்கும் எங்க தெய்வம் - நீங்க
கொடுத்தா நாங்க நல்லா செய்வோம் (2)

✍️செ. இராசா