தமிழில் #சிலேடை வாக்கியங்கள் பாடல்கள் அதிகம். சிலேடை என்றால் ஒரு சொல் அல்லது தொடர்ச்சொல் பல பொருள் படும்படி அமைவது என்பதை அனைவரும் அறிவோம்.
இங்கே
நான் மிகவும் இரசித்த ஒரு சிலேடை; (இதை நாலடியார் என்று தவறாகச்
சுட்டுகிறார்கள். யாரேனும் சரியான மூலம் அறிந்தால் கூற வேண்டுகிறேன்)![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
"காக்கைக் கறி சமைத்து கருவாடு மென்று தின்பர் சைவர்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அதெப்படி
காக்கையும் கருவாடும் சைவர்கள் தின்பார்கள் என்று நாம் யோசித்தால்
அப்பாடலின் அர்த்தம் அதுவல்ல என்பதை பதம் பிரித்து மீண்டும் அப்பாடலைப்
படித்தால் புரியும்.
கால்-கைக் (காய்)கறி சமைத்து (தன்)கரு வாடுமென்று தின்பர் சைவர்
தன் கையில் கால்பங்கு மட்டும் எடுத்த காய்கறியை சமைத்து தன் கருமையமான உயிர் வருந்துமென்று சாப்பிடுவார் சைவர்.
இப்பாடலை
நான் கூறியவுடன் ஒரு மேலூர் தம்பி அடித்தார் பாருங்கள் ஒரு பாடல்.
சத்தியமாக எனக்குப் புரியவே இல்லை. இது நம்ம ஊர்ப்பக்கம் நாடகங்களில்
பேச்சுவாக்கில் அடிக்கும் சொல்லாடல்கள்.
இதோ அப்புதிர்:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
எட்டுநாள் இலையறுத்து பத்துநாள் சமைத்து
ஆறுநாள் சாப்பிடு...![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
எதாவது புரிகிறதா?
இதைப்பேச்சுவாக்கில் மட்டுமே அணுக வேண்டும். எழுதினால் கண்டுகொள்வீர். எழுதவா?!
எட்டுனால் இலையறுத்து பத்துனால் சமைத்து ஆறுனால் சாப்பிடு.
கவனித்தீர்களா....நகரம் னகரமாகியுள்ளது.
அதாவது உன் உயரத்திற்கு எட்டுனால் இலையறுத்து; தீப்பெட்டி பத்துனால் சமைத்து; சோறு ஆறுனால் சாப்பிடவாம்.
சரி நாமும் இதுபோல் எழுதவோமா என்று யோசித்தபோது வந்ததே இந்தக்குறள்;![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
சொல்வதைச் செய்வோர்கள் தங்களை ஆயாமல்
கொல்வதால் நம்பாட்டைக் கூறு![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இதற்கு
விளக்கம் தேவையில்லை என்றே நினைக்கிறேன். கூலிப்படை போன்ற தற்குறிகள் தம்
நிலைமை பற்றி யோசிக்காமல் கொல்வதால் நாம் படும் பாட்டைக் கூறுகிறது.
ஆனால் சற்றே உற்று நோக்கினால்...
இப்படி மாறும்;![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
சொல்--வதைச் செய்வோர்கள் தம்--களை ஆயாமல்
கொல்வதால் நம்பாட்டைக் கூறு![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
சொல்லை
வதை செய்வோர்கள் தாம் செய்யும் களைகளை (பிழைகளை) ஆராயாமல் நம்மைக்
கொல்வதால் நாம் இயற்றிய பாட்டின் தன்மையைக் கூறு. அல்லது நாம் படும்
பாட்டினைக் கூறு.
எப்பூடி? நாங்களும் எழுதுவோம்ல.....![]()
![]()
![]()
![]()
செ. இராசா
03/11/2021
தமிழில் #சிலேடை
02/11/2021
அய்யனாரும் ஐயப்பனும் ஒரே தெய்வமே
அய்யனாரும் ஐயப்பனும் ஒரே தெய்வமே என்பதற்கு நான் கூறும் சாட்சிகள்;
1. அய்யனாருக்குக் கருப்பு சாமிகள் காவல் தெய்வமாக உள்ளதுபோல் ஐயப்பன் கோவிலிலும் கருப்பண்ண சாமியும் கடுத்த சாமியும் காவல் தெய்வங்களாக உள்ளனர். பதினெட்டாம் படிக்குக் கீழ் வருவதால் இவரே பதினெட்டாம்படி கருப்பர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த சாமி பற்றி நிறைய பாடல்கள் உள்ளன. (பிறந்தாய் மலையாளம் கருப்பன் பேருகொண்டாய் கீழ் நாடு, மலையாளத்து துரையானை என்னுள்ளத்தில் வந்தானைக் கண்டடியேன், மலையாள நாட்டில் மலர்ந்தாய் போற்றி....இப்படி) அக்காலங்களில் நிலப்பகுதிகளை சிறுபெரு நாடுகள் என்றே அழைத்தார்கள் என்பதால் மலையாள நாடும் நம் தமிழ்ச்சேரநாடே என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
மேலும் இந்த கருப்புசாமி போன்ற காவல் தெய்வங்கள் கேரளாவில் வேறு எந்த சாமிகளுக்குக் கிடையாது என்பதையும் கவனிக்க வேண்டும் .
2. நாம் சபரிமலையில் காணும் ஐயப்பன் என்பது பிரம்மச்சரிய வடிவம். அதே போல் அவருக்குப் பல வடிவங்கள் உள்ளன. குளத்துப்புழையில் குழந்தை வடிவம், ஆரியங்காவில் குமார வடிவம், அச்சன்கோவிலில் இல்லறத்தான் வடிவம், அதுவும் இரு மனைவியருடன். இதில் என்ன சிறப்பு என்றால் அவரின் மனைவியர் பெயர்கள் இரண்டும் அய்யனாரின் மனைவிகள் பெயர்களாய் இருப்பதே . ஆம் பூர்ணா (அ) பூர்ணகலா மற்றும் புஷ்கலா என்பதே அவர்களின் பெயர்கள் . அது எப்படிங்க மனைவிகள் பெயரும் ஒத்துப்போகும்? அங்கே தான் நம் அறிவு வேலை செய்ய வேண்டும்.
(ஆரியங்காவில் ஒரு தேவி மட்டுமே இருக்கும். அதன் பெயர் புஷ்கலாதேவி. இதற்கென்று ஒரு தனிக்கதை வேறு உண்டு)
3. ஐயப்பன் கோவிலும் ஐயனார் கோவிலும் ஊருக்கு வெளியே காட்டில்தான் இருக்கின்றன என்பதும் ஓர் ஒப்புமை. (இப்போது எல்லாம் நகரமயமாகிவிட்டது)
4. இங்கே மொழியும் நம்மை இணைக்கிறது. மேற்கூறிய பாடல்கள்போல் நிறைய பாடல்களே சாட்சி. ஐயப்பன் கோவிலில் "சாமியே சரணம் ஐயப்பா" என்று தமிழில்தான் எழுதி இருந்தார்கள். பின்னர் மாற்றிவிட்டார்கள் என்பது வரலாறு.
அதெல்லாம் சரி...இந்தப்பதிவு ஏன் இப்போது என்றுதானே கேட்கின்றீர்கள். சொல்கிறேன்...ஆவுடையார் கோவில் போன்ற கோவில்களில் இன்னும் மாற்று மொழி இல்லாமல் தமிழ் வழிபாடு உள்ளதுபோல், வேறு எங்கேயும் உள்ளதா என்று தேடிப்பாருங்கள்? நம்ம ஊர் காவல் தெய்வங்களை கும்பிட்ட நாம், எப்போது வெளி மாநில குருமார்களை கும்பிட ஆரம்பித்தோம் சற்றே யோசியுங்கள். மாயோன் சேயோன் என்று தொல்காப்பியம் கூறிய கண்ணனும் முருகனும் ஏன் கிருஷ்ணனாய் ஸ்கந்தனாய் மாறினார்கள்? ...இன்னும் புரியவில்லையா..?! எல்லாம் பிழைப்பிற்க்காக திரிக்கப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட கதைகளே....
இங்கே யாரையும் விரட்டிவிட வேண்டும் என்று சொல்லவரவில்லை. வள்ளுவர் வழியில் "மெய்ப்பொருள்" காண்போம் என்றே கூறுகின்றேன். ஒன்றே ஒன்று மட்டும் உண்மை உறவுகளே....மொழி மாறினால், கடவுளும் மாறிவிடும்.
மொழியைக் காப்போம் நம்மைச்சார்ந்த அனைத்தையும் காப்போம்.
செ. இராசமாணிக்கம்.
சின்ன மீனப் பெரியமீனு திங்குது
சின்ன மீனப் பெரியமீனு திங்குது- அது
என்ன செய்ய அதுக்கும் வேற வழியில்லை
ஒன்னு வாழ ஒன்னு இங்கே சாகுது- இது
என்ன கதை எனக்கும் ஒன்னும் புரியல...
வேகங் கொண்ட உசுரு
வேட்டையாடும் போது
பாவம் கொண்ட உசுரு
சாவநோக்கிப் போகும்!
தாகங் கொண்ட உசுரு
தத்தளிக்கும் போது
ஈரங் கொண்ட உசுரு
எந்தவுசுரப் பார்க்கும்!
✍️செ. இராசா
(இன்று காலையில் கத்தார் கார்னீஷ் கடற்கரையில் நான் கண்ட ஓர் காட்சி. காலையில் கடல்நீர் மிகவும் தெளிவாகக் கண்ணாடிபோல் தெரிந்தது...நிறைய மீன்கள் வேகமாகச் சென்ற அழகை இரசித்த படியே நின்றிருந்தேன். அப்போது திடீரென்று மின்னல் வேகத்தில் ஒரு பெரிய மீன் வந்து கூட்டத்தில் சென்ற மீன்களில் ஒன்றைக் கவ்விச்சென்றது. இப்படி மூன்றுமுறை 5 நிமிடங்களில் தன் பசிக்காக வேட்டையாடியது ஒரு பெரிய மீன். அப்போது எழுந்த பாடலே இது....)
01/11/2021
திருடாதே-----------வள்ளுவர் திங்கள் 183
ஒருவர் புகழை ஒருவர் பறித்தல்
திருட்டில் பெரிய திருட்டு
(1)
திருட்டிலே என்ன சிறிது பெரிது
திருடிடும் எண்ணமே தீங்கு
(2)
படைப்பைத் திருடும் பரதேசிக் கூட்டம்
கடைவரைப் போகாது காண்
(3)
திட்டங்கள் போட்டுத் திருடிடும் கூட்டத்தார்
சட்டத்தில் பார்க்கிறார் சந்து
(4)
கடனட்டை தந்து கடனாளி யாக்கி
கடைசியில் வைப்பார்பார் கை
(5)
உருகி உருகி உதட்டளவில் பேசி
உருவுவார் காசை உணர்
(6)
வாய்ப்புகள் வேண்டி வருகின்ற கூட்டத்தை
ஏய்ப்போரும் கள்வர்தான் இங்கு
(7)
அடுத்தவர் நேரத்தை அப்படியே பற்றிக்
கெடுப்போரும் கள்வர்தான் கேள்
(8.)
பாசத்தைக் காட்டிப் பறிக்கின்றோர் யாவர்க்கும்
மோசமாய்ப் போகும் முடிவு
(9)
இணையம் வழியேதான் ஏய்க்கின்றார் இன்று
நினைவில் இதனை நிறுத்து
(10)
✍️செ. இராசா
(படம்: எம் வீட்டில் உள்ள வள்ளுவர்)
சரி விடு பார்த்துக்குவோம்
சரி விடு பார்த்துக்குவோம்
சரி விடு பார்த்துக்குவோம்![]()
என்ன இப்போ நடந்தது
எதுக்கு இந்தக் கவலை![]()
நல்ல காலம் பிறக்குது
நமக்கு ஏனோ வரலை![]()
சின்னச் சின்னச் சறுக்கலு
சிதைச்சிடுமா ஆளை![]()
ஏறும் முன்னே வழுக்குது
ஐயோ நானும் ஏழை..![]()
சிங்கம் போல சீறிநில்லு
போட்டிடுவான் மாலை![]()
எங்கே நாம நிக்கிறது
வாறுறானே காலை![]()
சும்மாச் சும்மாக் கலங்காத
தேடி வரும் நாளை![]()
நாளை வந்து சொல்லாதநீ
நாடி வரும் வேளை
சரி விடு பார்த்துக்குவோம்
சரி விடு பார்த்துக்குவோம்![]()
என்ன வேணாம் சொல்லு-நீ
வெல்ல வேணும் தில்லு.....
இன்னும் இன்னும் செல்லு- நீ
முன்னேப் போயி நில்லு..
செ. இராசா



