உலகப் பெருங்கடலில்
ஓட்டியுள்ள மணற் துகளாய்
பிரபஞ்சப் பெருங்காட்டில்
பிரசவித்த சிறு புழுவாய்
முகநூல் பெரு ஏட்டில்
முடங்கிடவா எழுதுகின்றேன்?!!
அருவ மனதிற்குள்
அடங்காத உணர்வுகளை
உருவ உடை கொடுத்து
உலவிடவே எழுதுகின்றேன்
உலகியல் புரியாமல்
உளருகின்ற பைத்தியம்போல்
சில நேரம் சில வரிகள்
சிரமிறங்கிக் கரம் வரலாம்..
நானென்ன செய்திடுவேன்?!!
நானாவா எழுதுகின்றேன்?!!
நான் என்னைக் கொன்ற பின்னே
நானெங்கே இருக்கின்றேன்?!
தமிழோடு தனியாக
தமிழாடும் போதெல்லாம்
முக்தியை அடைந்ததுபோல்
மூழ்கியேக் கரைகின்றேன்...
(சுயம்)