19/04/2019

5_வடிவங்களில்_வள்ளுவம்<<<<<<<<<<<<,(வெண்பா-10)


****************************
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
மரபுக்கவிதை-வெண்பா
************************
எத்தனையோ நூல்களிங்கு ஏராளம் என்றாலும்
அத்தனையும் ஆகிடுமா ஆகாது-சத்தியத்தை
எத்திக்கும் எங்கேயும் எல்லோர்க்கும் செப்புவதில்
சத்தியமாய் வள்ளுவமே சான்று!

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
குறள் வெண்பா
**************
எழுஎழு சீரில் எழிலாய் அமைத்து
எழுதி(ய)டும் வெண்பா குறள்

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
புதுக்கவிதை
***********^
பள்ளியில் கசந்தாய் நீ
பருவ வயதில் புளித்தாய் நீ
இப்போது மட்டும் இனிக்கிறாய்

உண்மையில்..
நீ...நீயாகத்தான் இருக்கிறாய்
நான்தான் மாறிவிட்டேன்..
உன் குற(ர)ளின் வலிமையால்...

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
குறுங்கவிதை
*************
இரண்டே அடியில்
அகிலம் அளக்கப்பட்டது
திருக்குறளில்

🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
சந்தப்பாடல்
*************
(முத்தைத்திரு- மெட்டு)

சந்தத் தமிழ் வந்துத் துள்ளிட
சங்கத் தமிழ் நன்றே போற்றிட
எந்தைக் குறள் எந்தன் குரல்
திருக்குறளே...

அறத்தின் பால் அழுத்திச் சொல்லிட
பொருளின் பால் பகுத்துச் சொல்லிட
இன்பப் பால் என்றும் இனித்திடும்
திருக்குறளே....

கற்கும் குறள் கற்றிட கற்றிட
பற்றும் குறள் பற்றிட பற்றிட
ஏற்றம் பல மாற்றம் தருவதும்
திருக்குறளே...

✍️செ.இராசா

No comments: