13/05/2018

அன்னையர் தின வாழ்த்துகள்---தீபா மோகன் ராஜ்

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் கூறிக்கொண்டு, கருணையின் வடிவமாகத்திகழும் சகோதரி தீபா மோகன் ராஜ் அவர்களை வாழ்த்தி மகிழ்கின்றேன்.
அவர்களை அறிமுகப்படுத்திய அக்கா Agalya Ravi அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
(கண்ணுக்குத் தெரியும் கடவுளின் வடிவமான அன்னையை வணங்குவோம் 



தீபா மோகன்ராஜ்
*****************
“தீபா”
குன்றின்மேல் தீபமாய்
குன்றாத ஒளிகொண்டு
அன்புச் சுடர்விடும்
அற்புத அன்னைக்கு
எத்தனை அழகான பெயர்!!
எவ்வளவு பொருத்தமான பெயர்?!!

ஆம்.... அதிசயம்தான்

குறைவில்லா மனத்தோடு
நிறைவான குணத்தோடு
அறுபத்து ஐவரோடு
அவர்களோடு ஒருவராக
உறவின் உரமாக
உழைக்கின்ற உத்தமரே தீபா...

தான்பெற்றிடாப் பிள்ளைகள்
நூற்று முப்பத்து ஐவரையும்
தாய்கொண்ட அன்போடு
தாங்கிநிற்கும் பெருந்தகையே...தீபா..

சிகரமாய்த் திகழ்கின்ற
சிறப்புப் பள்ளி நிறுவனரே தீபா....

ஆட்டிசம் என்றும்
டவுன்ஸ் சிண்டரோம் என்றும்
ஏதேதோ பெயர்கொண்டு
எவரிங்கே வந்தாலும்
அத்தனை குழந்தைகளையும்
அரவணைக்கும் நற்குணவதியே...தீபா

ஈன்றதோ இரு மலர்கள்
ஈட்டியதோ பல மலர்கள்....

அன்றொரு நாள்
இரண்டாம் மலருக்கு
மூன்றாம் வயதில்வந்த குறைபாடு..
கிரெனியோஸ்டெனோசிஸ்
மூளை வளர்வதற்குள்
மூடியதாம் மண்டையோடு
மூளையில் குறைபாடு.

அய்யோ... என்ன இது?!
பதறினார்.... பரிதவித்தார்...

குறை களைய ஆளில்லை...
குறை நீக்க இடமில்லை

தன்னைத் தானே தேற்றினார்
தனக்கான பாதை கண்டார்

பெற்றோருக்கும் தீபமானர்
மற்றோருக்கும் தாயானார்...

வணங்கியே அவரை
வளம்பெற வாழ்த்துவோம்...

https://tamil.yourstory.com/…/37d542ea…/deepak-mohanraj-39-s

தமிழ் கவிதை தந்த
சகோதரர் Raja Manickam
அவர்களுக்கு நன்றி🙏

 https://www.facebook.com/agalya.sapphire/posts/1890027797698649



🙏🙏🙏)
பிற்சேர்க்கை:
*************
தங்களுடை சேவை மிகவும் மகத்தானது.
எண்ணம் சொல் செயல் மூன்றும் ஒன்றானவர்களால் மட்டுமே இவ்வளவு பெரிய அறப்பணி செய்ய முடியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

“தெய்வம் பூமிக்கு வருவதில்லை தாயைப் பதிலுக்கு அனுப்பி வைத்தான்....” என்று வரும் பாடல் வரிகளே எனக்கு ஞாபகம் வருகிறது. அந்த பாடல் வரிகளோடு Agalya Ravi அக்காவின் வரிகளையும் இணைத்து மாற்றினால்

இதோ இப்படி எழுதலாம்....

தெய்வம் பூமிக்கு வருவதில்லை
தாயைப் பதிலுக்கு அனுப்பி வைத்தான்...
தாயில் சிறந்தது எதுவுமில்லை....
தாயில் சிறந்தத் தாயாக
அவனே தங்களுள் இறங்கி விட்டான்...

வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்

12/05/2018

என் கவிதை தமிழருவி இதழில்

நண்பர்களே முதல் முறையாக என் கவிதை தமிழருவி இதழில் பிரசுரமாகி உள்ளது.
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
திரு. சேக்கிழார் அப்பாசாமி ஐயா
கவிஞர். முல்லை நாச்சியார் அக்கா
அவர்களுக்கு சிறப்பு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


10/05/2018

சின்னச்சின்ன ஊடலில்



(எசப்பாட்டு வடிவத்தில் எழுதியது)
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

வண்ணமய வாழ்க்கையிலே
சண்டையிடும் என்னவளே...
என்னைநானும் தந்த பின்னே
இன்னும் என்ன வேண்டுமடி?

சின்னச்சின்ன ஊடலையும்
சண்டையாக்கும் என்னவரே
என்றும் உங்க அன்பு மட்டும்
இன்னும் இன்னும் வேண்டுமய்யா?

பாலைவனக் காசுலதான்
சேலையெல்லாம் வாங்கித்தந்தேன்
நகைப்போடு இருக்கத்தானே
நகையெல்லாம் வாங்கித்தந்தேன்

அய்யோ மச்சான் நிறுத்துங்க...
அம்புட்டய்யும் சொல்லாதீக...
அன்போடு மல்லிகைப்பூ
அந்தியில வாங்கி வாங்க....

அன்பு மனம் புரியாமல்
உன்னோடு சண்டையிட்டேன்
அன்பே நீயும் காத்துநில்லு
அத்தான் நானும் ஓடிவர்ரேன்..

தண்ணீர்



அடிமேல் அடிகூட்டி
ஆழ்துளைக் கிணறு தோண்டி
அடிநீரை உறிஞ்சும் போட்டி
அடிக்கடி நடக்குதிங்கே.....

அடிமண்ணின் ஈரமெல்லாம்
அடியோடு போகுமென்றால்
அடுத்தத் தலைமுறையும்
அடுத்துதான் போவதெங்கே?

மழைநீரைச் சேகரிக்கும்
மகத்துவத்தை அறியாமல்
நெஞ்சிலே ஈரமின்றி
நிலநீரை எடுக்கலாமா?!

அடிநீரைக் கூட்டுகின்ற
அறிவியல் அறியாமல்
அனைத்தையும் அழித்துவிட்டு
அநாதையாய் ஆ(க்)கலாமா?!

*****************************
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடிக்கு அனைவரும் குடிபெயர்வதற்கான காரணங்களில் நல்ல நிலத்தடி நீர் குறைந்த ஆழத்தில் கிடைப்பதும் ஒரு காரணமாக இருந்தது. இனி அந்தத் தகுதியை காரைக்குடியும் இழந்துவிட்டது. ஆம் 350 அடி ஆழத்திலும் நீர் இல்லை.......ஆழம் கூடிக்கொண்டே போகிறது. இதே நிலைமைதான் தமிழ்நாடு முழுவதும் என்று நினைக்கின்றேன்.

அன்பு உறவுகளே, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அரசாங்க ஒப்புதலுக்காக ஒரு பேருக்குச் செய்யாமல் அனைவரும் உண்மையில் சரியாகச் செய்து நீர்வளத்தைப் பெருக்க வேண்டுகின்றேன்)

அன்புடன்,
✍️செ. இராசா

09/05/2018

பாஞ்சாலி சபதம்



பாஞ்சாலி
**********
பாஞ்சால மன்னரின் வேள்வியிலே
பாஞ்சாலி நானும் அவதரித்தேன்!
பார்த்தனின் கழுத்தில் மாலையிட்டே
பாண்டவர் ஐவரை மணமுடித்தேன்
பகடையால் என்னைத் தவறவிட்ட
பதிகளால் நானும் மனமுடைந்தேன்!

கயவர்கள் நிறைந்த அரங்கினிலே
கலங்கிய விழிகளால் கதறுகின்றேன்!
அரங்கம் முழுவதும் நிரம்பியுள்ள
அரக்கர்கள் கூட்டத்தைக் காணுகின்றேன்!
உடையினைக் களையவே வருபவனை
தடையிட்டு நிறுத்த எவருமில்லை!

கண்ணா நின்னைச் சரணடைந்தேன்
கற்பின் மானத்தைக் காத்தருள்வாய்!
கோவிந்தா நின்னைச் சரணடைந்தேன்
கோபியரைப் போலவே இரட்சிப்பாய்!
மாதவா நின்னைச் சரணடைந்தேன்
மாயவா மின்னலாய் உடன்வருவாய்!

கண்ணா...கோவிந்தா...மாதவா..............

சபதம்:
*******
துகிலினைக் களைந்திட ஆணையிட்ட
துரியோதனன் குருதி வேண்டுகின்றேன்!
துகிலினைக் கரங்களால் தொட்டிழுத்த
துச்சாதனன் குருதியும் வேண்டுகின்றேன்!

குருதிகள் இரண்டையும் ஒன்றினைத்து
குழலிலே நானும் தடவும்வரை
குரூரர்கள் மண்ணில் வீழும்வரை
கூந்தலை விரித்தே இருந்திடுவேன்!

(இன்றைய நிலை)
*****************
எங்கெங்கு காணினும் துச்சாதனர்
எங்கெங்கு காணினும் துரியோதனர்

கயவர்கள் எண்ணிக்கை பெருகியதே
கண்ணனை இன்னும் காணலையே.....?!

ஆடையை இழுத்த பாவிகளால்
ஆவியாய் நானும் திரிகின்றேன்..

எங்ஙனம் நானும் சூளுரைப்பேன்?
எங்கே நானும் முறையிடுவேன்?
.......
........
ஐயகோ...

✍️செ. இராசா

07/05/2018

இல்லை.....இருக்கிறது




“இல்லை”✖️என்கிறான் இவன்
“இருக்கிறது”✔️என்கிறான் அவன்

“கண்டிப்பாக இல்லை”✖️✖️என்கிறான் இவன்
“கண்டிப்பாக இருக்கிறது” ✔️✔️என்கிறான் அவன்

இருவருக்கும் கருத்து மோதல்
இறுதியில் கைகலப்பு🤜🤛

இருவருமே யோசித்தனர்....🤔🤔
இல்லாத ஓன்றை
இருப்பதாய் நினைப்பவனிடம்
இத்தனை மோதல் தேவைதானா?
என்று இவனும்.....

இருக்கின்ற ஒன்றுக்கு
இருப்பு அறியாதவனிடம்
இந்த மோதல் தேவைதானா?
என்று அவனும்....

இருவேறு திசையில் யோசித்தனர் 🤔🤔

இரட்டைநிலையே
இவ்வுலகம் என்று அறியாமலேயே.....

ஆம்...

உண்டு- இல்லை
உண்மை- பொய்
இரவு-பகல்
மேடு- பள்ளம்
...........
...........
இப்படி இரட்டைநிலையில்தான்
இவ்வுலகம்.....

இப்போது கம்பராமாயணம் பாருங்கள்
*************************************
வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
ஒண்மை இல்லை, பல் கேள்வி ஓங்கலால்.
****************************
வறுமை சிறிதும் இல்லாதலால் வண்மையின்
சிறப்புத் தெரிவதில்லை;
பகைகொண்டு போர்புரிபவர் இல்லாதலால்
உடல் வலிமையை உணர வழியில்லை;
பொய் பேசுவோர் இல்லாமையால் உண்மையின் பெருமை தெரிய வழியில்லை;
கேள்வி ஞானம் மிகுந்திருப்பதால் அங்கு அறியாமை சிறிதுமில்லை
***********************************
ஆக

இதன்மூலம் அறிவது என்னவென்றால்
இல்லை என்பவர்களால்தான்
இருப்புநிலை உணரப்படுகிறது...

அறிவோம்......நன்றி

✍️செ. இராசா

06/05/2018

சக்கரம்



வட்டமாகச் சுற்றுகின்ற சக்கரங்கள் எல்லாம்
சத்தியத்தைச் சொல்லுகின்ற சக்கரங்கள் ஆகும்!
குயவனவன் சுற்றுகின்ற சக்கரத்தின் தோற்றம்
இறைவனவன் சுற்றுகின்ற சக்கரத்தின் பிம்பம்!

அணுக்கருவில் சுற்றுகின்ற அறிவியலைக் கண்டால்
அண்டங்களில் சுழலுகின்ற அத்தனையும் விளங்கும்!
உயிர்களிலே ஓடுகின்ற உதிரஉயிர் ஓட்டம்
உடலினிலே சுற்றுகின்ற வட்டவடிவ ஓட்டம்!

ஒருபுள்ளிப் பயணமது ஒருதிசையில் சென்றால்
மறுபடியும் சேருமிடம் அதேபுள்ளி ஆகும்!
ஒருவட்டம் போட்டுவிட்டு மையப்புள்ளி வைத்தால்
மறுபடியும் வட்டமாக அப்புள்ளியும் மாறும்!

தேசியத்தை உணர்த்துகின்ற சக்கரத்தின் உருவம்
ஆசியாவின் ஜோதியான தருமத்தின் வடிவம்!
சுதர்சனமாய் சுற்றுகின்ற சக்கரத்தின் உருவம்
சுழலுகின்ற தத்துவத்தைச் சொல்லுகின்ற வடிவம்!

---செ. இராசா--

04/05/2018

அவசரமாக.....

அவசரமாகவும் பரபரப்பாகவும் கிளம்புகின்றனர்
தியான வகுப்பிற்கு

ஊழ்வினை



என்றோ விதைத்த விதைகளெல்லாம்
இன்றைய விருட்சமாய் ஆனதைப்போல்
என்றோ விதைத்த வினைகளெல்லாம்
இன்றைய வாழ்க்கையாய் ஆனதன்றோ!

எத்தனை எத்தனைப் பதிவுகளோ
அத்தனை அத்தனை வினையாகி
ஒவ்வொரு வினைக்கும் சமமான
மற்றொரு விளைவினைத் தருமன்றோ?!

கிடைத்த பிறவிகள் எல்லாமே
உறைந்த வினையின் பயனாகும்!
ஊறுகள் வருவது எல்லாமே
ஊழ்வினைப் பதிவின் விளைவாகும்!

✍️செ. இராசா

03/05/2018

அறிவு என்பதே நான்தான் என்றான்



கவிதையின் கணக்கை நிறுத்தி வைத்த
கடவுளின் கருணையைக் கேள்வி கேட்டேன்!
கற்றிட வேண்டிய எல்லாம் கற்றால்
கடவுளே கவிதையாய் வருவான் என்றான்!

கற்கும் வழியினைக் காட்டிட வேண்டி
கருணைக் கடவுளை மீண்டும் கேட்டேன்!
படைத்தவன் படைத்த படைப்பில் சிறந்த
படைப்பினை நாளும் படிக்கச் சொன்னான்!

படைப்புகள் பிறப்பது எப்படி என்றால்
படைப்பின் மூலம் நூல்கள் என்றான்!
நூல்கள் பிறப்பது எப்படி என்றால்
நூல்களின் பிறப்பு கற்பதில் என்றான்!

கற்பதில் வருவது யாதெனக் கேட்டால்
கற்பதில் வருவது அறிவு என்றான்!
அறிவு என்பது யாதெனக் கேட்டால்
அறிவு என்பதே நான்தான் என்றான்!

✍️செ. இராசா