“இல்லை”✖️என்கிறான் இவன்
“இருக்கிறது”✔️என்கிறான் அவன்
“கண்டிப்பாக இல்லை”✖️✖️என்கிறான் இவன்
“கண்டிப்பாக இருக்கிறது” ✔️✔️என்கிறான் அவன்
இருவருக்கும் கருத்து மோதல்
இறுதியில் கைகலப்பு🤜🤛
இருவருமே யோசித்தனர்....🤔🤔
இல்லாத ஓன்றை
இருப்பதாய் நினைப்பவனிடம்
இத்தனை மோதல் தேவைதானா?
என்று இவனும்.....
இருக்கின்ற ஒன்றுக்கு
இருப்பு அறியாதவனிடம்
இந்த மோதல் தேவைதானா?
என்று அவனும்....
இருவேறு திசையில் யோசித்தனர் 🤔🤔
இரட்டைநிலையே
இவ்வுலகம் என்று அறியாமலேயே.....
ஆம்...
உண்டு- இல்லை
உண்மை- பொய்
இரவு-பகல்
மேடு- பள்ளம்
...........
...........
இப்படி இரட்டைநிலையில்தான்
இவ்வுலகம்.....
இப்போது கம்பராமாயணம் பாருங்கள்
**************************
வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
ஒண்மை இல்லை, பல் கேள்வி ஓங்கலால்.
**************************
வறுமை சிறிதும் இல்லாதலால் வண்மையின்
சிறப்புத் தெரிவதில்லை;
பகைகொண்டு போர்புரிபவர் இல்லாதலால்
உடல் வலிமையை உணர வழியில்லை;
பொய் பேசுவோர் இல்லாமையால் உண்மையின் பெருமை தெரிய வழியில்லை;
கேள்வி ஞானம் மிகுந்திருப்பதால் அங்கு அறியாமை சிறிதுமில்லை
**************************
ஆக
இதன்மூலம் அறிவது என்னவென்றால்
இல்லை என்பவர்களால்தான்
இருப்புநிலை உணரப்படுகிறது...
அறிவோம்......நன்றி
✍️செ. இராசா
No comments:
Post a Comment