அடிமேல் அடிகூட்டி
ஆழ்துளைக் கிணறு தோண்டி
அடிநீரை உறிஞ்சும் போட்டி
அடிக்கடி நடக்குதிங்கே.....
அடிமண்ணின் ஈரமெல்லாம்
அடியோடு போகுமென்றால்
அடுத்தத் தலைமுறையும்
அடுத்துதான் போவதெங்கே?
மழைநீரைச் சேகரிக்கும்
மகத்துவத்தை அறியாமல்
நெஞ்சிலே ஈரமின்றி
நிலநீரை எடுக்கலாமா?!
அடிநீரைக் கூட்டுகின்ற
அறிவியல் அறியாமல்
அனைத்தையும் அழித்துவிட்டு
அநாதையாய் ஆ(க்)கலாமா?!
**************************
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடிக்கு அனைவரும் குடிபெயர்வதற்கான காரணங்களில் நல்ல நிலத்தடி நீர் குறைந்த ஆழத்தில் கிடைப்பதும் ஒரு காரணமாக இருந்தது. இனி அந்தத் தகுதியை காரைக்குடியும் இழந்துவிட்டது. ஆம் 350 அடி ஆழத்திலும் நீர் இல்லை.......ஆழம் கூடிக்கொண்டே போகிறது. இதே நிலைமைதான் தமிழ்நாடு முழுவதும் என்று நினைக்கின்றேன்.
அன்பு உறவுகளே, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அரசாங்க ஒப்புதலுக்காக ஒரு பேருக்குச் செய்யாமல் அனைவரும் உண்மையில் சரியாகச் செய்து நீர்வளத்தைப் பெருக்க வேண்டுகின்றேன்)
அன்புடன்,
✍️செ. இராசா
No comments:
Post a Comment