03/10/2021

போல



அவரைப்போல
இவரைப்போல என்றால்
இங்கே 'போல' என்பது பிரதியாகிறது!

நிலவைப்போல
மலரைப்போல என்றால்
இங்கே 'போல' என்பது உவமையாகிறது!

ஒப்புநோக்கில் சொல்லப்படும் 'போல'
உயர்வாக இருந்தாலும்
அது அகந்தையைச் சீண்டும்போது
அவமானமாகிறது!

காதல்நோக்கில் சொல்லப்படும் 'போல'
மலிவாக இருந்தாலும்
அது அகத்தினைத் தீண்டும்போது
ஆனந்தமாகிறது!

சிவாஜிபோல நடிக்கிறார் என்றால்
சிவாஜியின் பிம்பமே ஒழிய
சிவாஜியென ஆகாதே
கவியரசர்போல எழுதுகிறார் என்றால்
கவிநடையின் சாயலே ஒழிய
கவியரசாய் ஆகாதே

நாம்போல் இங்கே
நாம் மட்டும்தானே
நம்போல் பிறரென்றால்; அது
நாமாய் ஆகாதே...

ஆனாலும் இந்தப் 'போல' எனும்சொல்தான்
எத்தனை அற்புதமானது?

துதிபாடி குளிப்பாட்டி
தொங்கவிடும் அலங்காரமாய்
போல எனச்சொல்லிப் புகழ்பாடும்!

களிப்போடு சுதியேற்றித்
களங்காணும் சிருங்காரமாய்
போல எனச்சொல்லிக் கவிபாடும்!

புரியாத தத்துவத்தை
புரிய வைக்கும் விஞ்ஞானமாய்;
போல எனச்சொல்லி புலப்படுத்தும்!

அறியாத அறிவியலை
அறிய வைக்கும் மெய்ஞானமாய்
போல எனச்சொல்லித் தெளியவைக்கும்!

எங்கே நீங்களும்...
இந்தப்'போல' போல சொல்லிருந்தால்
சொல்லுங்கள் பார்ப்போம்?!

✍️செ. இராசா

02/10/2021

காந்தி உயிர்த்தெழுந்தால்----குறள் வெண்பாவில்



உப்புவரி போட்டவரை ஓடவிட்ட தேசத்தில்
தப்புவரி போட்டவர்யார் செப்பு?
(1)

ஜின்னாவும் நேருவும் சேர்ந்திருந்தால் இந்நேரம்
இன்னாவைக் காண்போமா இங்கு?
(2)

ஏட்டிக்குப் போட்டியாய் எப்போதும் மோதினால்
நாட்டிற்காக் கிட்டும் நலம்?
(3)

துப்பாக்கித் தூக்கார்முன் துப்பாக்கித் தூக்கியே
தப்பாக்கித் தாக்கினால் தப்பு
(4)

அரிசனம் ஓங்கிட அம்பேத்கர் தந்த
உரிமைகள் எங்கே உரை?!
(5)

உயிர்வதைத் தப்பென்ற உண்மையைச் சொன்னால்
உயிர்க்கொலை செய்யும் உலகு
(6)

குடிகாக்க வேண்டிக் குடியரசு செய்தால்
குடி-அரசாய் ஆனதேன் கூறு?
(7)

சட்டத்தின் முன்னே சகலரும் ஒன்றென்றால்
இட்டம்போல் மாற்றுபவர் யார்?
(😎

நீட்டென்றும் கேட்டென்றும் நீட்டி முழங்காமல்
நீட்டுவீர் நல்நம்பிக் கை
(9)

வேற்றுமையில் ஒற்றுமைதான் வேண்டுகிற ஒன்றியமாம்
மாற்றிவிட வேண்டாம் மதி
(10)

✍️செ. இராசா

#வீர_வணக்கம்

29/09/2021

குஷ்பூவைக் கண்டதுமே

 


புஸ்ஸென்று பூத்திருந்து
..... புஸ்வானம் ஆகிவிட்ட
குஷ்பூவைக் கண்டதுமே
....கூடவந்து- குஸ்தியிட
தொப்பைய உள்ளவச்சு
...‌.துள்ளிவரும் சின்னதம்பி
அப்பப்பா என்னே அழகு!

✍️செ. இராசா

கசங்கி இருந்தாலும்

கசங்கி இருந்தாலும்
மதிப்புடன் செல்கிறது
பணம்

பாலாய் நினைந்தது

 

பாலாய் நினைந்தது பாழாய்த் திரியுமெனில்
காலால் உதறிக் கட
 
✍️

தோசைக்கு மீனென்றால்

 


தோசைக்கு மீனென்றால் தொட்டுக்கக் கூச்சமா?!
ஆசையுடன் தள்ளலாம் அஞ்சு
✍️

கேழ்வரகு தோசை😊😊 வாங்க சாப்பிடலாம்... 💐💐💐

27/09/2021

யாதும் ஊரே யாவரும் கேளிர்--புறநானுறு

 #புறநானுறு- (முதல் நூற்றாண்டு)
#PURANANURU(1st Century) 1st BCE

#புறம்_192 (POEM 192)
#கணியன்_பூங்குன்றனார் (KANIYAN POUNGUNDRANAAR)

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

#பொருள்

எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை பிறரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் என்பது புதியது இல்லை, வாழ்தல்
இனியது என்று மகிழ்ந்ததும் இல்லை
வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை

வானத்தின் குளிர்ந்த மழைத் துளியானது,
கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு ஓடும் பேராற்றின்
நீர்வழி தடத்திலே போகும் மிதவை போல, அரிய உயிரியக்கமானது
இயற்கைவழி போகத் தான் செய்யும் என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லிய காட்சியில் தெளிந்தோம், ஆதலினால் பிறந்து வாழ்வோரில்
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை

#ENGLISH_TRANSLATION

Every town our home town, Every man our relatives
Good and evil do not come from others.
Even pain and relief come of themselves.
Dying is nothing new.
We do not rejoice that life is sweet nor call it bitter.

after a downpour from skies, the rain drop
sounding and dashing across the rocks and river
Over water course as rafts drifting in the rapids of a great river
Our lives, however dear, follow their own course,
we know this from the vision of men who see.

So, we are not amazed by the great,
and we do not scorn the little.

ஈர்ப்புவிசை

 


சூரியனை மையம் கொண்டு
சுற்றுவது பூமி என்ற
கலிலியோவைக் குறைகூறி
கண்டபடி கதைத்ததுபோல்
உன்மேல் மையம் கொண்டு
உமைச்சுற்றி வருமென்னை
காமக் கிறுக்கனெனக்
கண்டதுபோல் பேசுகின்றார்!

சரி விடு..
காமமோ காதலோ...
உன் ஈர்ப்புவிசை உண்மை தானே?!
😊😊😊😊
என்ன சிரிப்பு?!
உன்மெய் அல்ல‌......உண்மை!

✍️செ. இராசா

#வள்ளுவர்_திங்கள்_178

26/09/2021

உன்னை யாரும் விரும்புவதில்லை

உன்னை யாரும் விரும்புவதில்லை
அதற்காக நீ விடுவதுமில்லை
உன்னை யாரும் வரவேற்பதில்லை
அதற்காக நீ வராமலுமில்லை

உண்மையில்...
உன்னைக் காணாமல் இங்கே
யாருக்கும் எந்த உயரமும் இல்லை..
உன்னை எண்ணாமல் இங்கே
யாருக்கும் எதுவும் ருசிப்பதே இல்லை..

இருந்தும்
உன்னை யாரும் விரும்புவதில்லை
அதற்காக
நீ விலகுவதும் இல்லை....

சரி வா‌....ஒன்றாய்ப் பயணிப்போம்
கொஞ்ச நாட்கள்தானே...

என் அன்புத் #தோல்வியே....

#தோல்வி

24/09/2021

QATAR FIFA TAMIL SONG---FOR TUNE


:0:36
 
உன்னை வெல்ல இங்கே
..என்ன வேணும் போ.
முன்னே உள்ள தாரு
..எண்ண வேணாம் போ
இன்னும் என்ன வேணும்
..எட்டி தூரம் போ
முன்னும் பின்னும் தாண்டி
.. முட்டி முன்னே போ
 
0:50
 
கத்தார் மண்ணில் இங்கே
‌...காட்டும் வீரன் யார்?
கெத்தாய்க் காட்டி வீழும்
.. கானல் நீரும் யார்?
கிட்டும் வாய்ப்பைக் கோலாய்
.‌‌..மாற்றும் தீரன் யார்?
எட்டும் கோப்பைக் கென்றே
...ஏங்கும் சூரன் யார்?
 
1:30
 
யாரென்ன சொன்னால் என்ன
...உந்தன் நோக்கில் நீயும் ஓடு.
கோலைப் போடும் எண்ணத் தோடே
...ஓடும் வேகம் கூட்டி ஓடு
காலங்கள் தோறும் உன்னை
.. நெஞ்சில் லியோனல் மெஸ்ஸி போலே
நீயும் என்றும் நெஞ்சில் கொண்டே
..நேராய்ப் பந்தைக் கோலாய் மாற்று (2)