09/06/2012

கனவில் காண்பதல்ல நட்பு

நினைவில் வைத்து
கனவில் காண்பதல்ல நட்பு !.

மனதில் புதைத்து மரணம்
வரை தொடர்வதுதான்
உண்மையான நட்பு !!

09/10/2010

அழகு! அழகு !


அழகு! அழகு !
எதுதான் அழகு ?
என் அன்பு மகனின் 
கொஞ்சல் பேச்சழகு!
அன்ன நடையழகு!
பால் பற்களின்  புன்னகை அழகு!
சொக்கிய விழிகளின்  பார்வையழகு!  
உண்ட பின் செருமல் அழகோ அழகு ! 
அழகு! அழகு ! 
எதுதான் அழகு ?




20/09/2010

வாஸ்து என் பார்வையில்

வாஸ்து என் பார்வையில்

வாஸ்து என்றால் என்ன ?
         வாஸ்து,வாஸ்து  என்று நாம் எங்கு திரும்பினாலும் கேட்கின்ற ஒரு சொல்லாக இது உள்ளது.அப்படி என்ன தான் சொல்கின்றது இந்த வாஸ்து?
        மனிதனின் அத்தியாய தேவைகளின் ஒன்றாக  இருக்கும் இருப்பிடத்தை, ஒரு இயற்க்கை விதியோடு வடிவமைப்பதே  வாஸ்து ( வாஸ்து சாஸ்திரம் என்பர் சிலர் ) என்கிறோம் .

பொறியாளருக்கு வாஸ்து தெரிய வேண்டுமா ?
        ஊரோடு ஒத்து போகிறவர்கள் தானே சாதிக்க முடியும்.  வாஸ்து பழமையான விதியாக இருப்பினும் ,பெரும்பாலனோர் வாஸ்து விதி கட்டிடத்தை தான் விரும்புகின்றனர் .எனவே அதை பற்றிய அடிப்படை அறிவு  இந்தியப் பொறியாளருக்கு  கண்டிப்பாக அவசியம்.

வாஸ்து அறிவியல் பூர்வமானதா?
           பழமை அனைத்தையும்  புதிய அறிவியலால் விளக்க முடிந்தால் தான் நம் அறிவு அதை ஏற்கும்.இல்லையேல் அது எப்பேர்பட்ட தாயினும் பகுத்தறிவு யோசிக்க வைக்கும்.
           ஆம் பஞ்ச பூதங்களையும்(நீர்,நிலம் ,நெருப்பு ,காற்று,ஆகாயம்) நமக்கு பயன்படும் வகையில் நம் வீட்டை வடிவமைப்பதே இந்த வாஸ்து விதி.
            நம் பூமி 23 1/2 பாகை சாய்வாக சுற்றுகிரதல்லவா? புவி ஈர்ப்பு விசை  நம்மை என்றும் பாதிக்கும் காரணி,சரி தானே ?  இதை சரி சைய்ய வேண்டி உள்ளது ,ஆகவே தான் ஒரு பக்கம் நாம் (தென் மேற்கு ) உயர்த்தியும் ,மறுபக்கம் (வட கிழக்கு ) தாழ்த்தியும் அமைக்கிறோம்.
              நமக்கு வட கிழக்கு  பருவ காற்று அதிகம் வீசுவதால், ஹால் மற்றும் போர்டிகோ வடகிழக்கில் வருவதாக அமைக்கிறோம் .
              மலைச்சாரல் உள்ளே வரக்கூடாது என்பதற்க்காக  வடக்கு மற்றும் கிழக்கு பகுதி கூரை தாழ்வாக இருக்க வேண்டும்.சனி மூலையில் போர் போடுவது என்பது ஒரு பொதுவான விதியே.(அனைவரும் ஒரே விதியில் சென்றால் ஊற்று பரப்பு பிரச்னை வராதல்லவா? )
            காலைக் கதிரவன் கதிர்கள் சமையலறை சன்னலில் படும் பொழுது அதில் படிந்துள்ள பூஞ்சைகள் அழிகின்றன,எனவே தான் நாம் சமையலறையை  தென் கிழக்கில் அமைக்கின்றோம் . மாலைக் கதிரவனில்  விட்டமின் D உள்ளது,அதன் கதிர் விழ படுக்கை அரையை  தென் மேற்கில் அமைக்கிறோம்.
              இப்பொழுது நாம் கூறலாமல்லவா, வாஸ்து நவீன அறிவியலோடு ஒத்துள்ளது என்று. இயற்க்கையை சரியான விகிதா சாரத்தில் பயன்படுத்தும் அறிவியல் கலை-வாஸ்து .

வாஸ்துவால் என்ன நன்மை?
           இயற்கையோடு  பொருந்தி வீடை வடிவமைப்பதால் நம் வீடு ஒரு உயிர் ஓட்டமுள்ள இல்லமாக நம்மை சந்தோசப்படுத்துகிறது.ஆரோக்கியம் மற்றும் உற்சாகம் கிடைக்க வழி வகுக்கின்றது.  நாம் கட்டிய வீட்டில், நிம்மதி கிடைக்கும் பொழுது நமக்கு மகிழ்ச்சி தானே?.

 எல்லாரும் வாஸ்து பார்த்து கட்ட முடியுமா ? 
             கண்டிப்பாக முடியாது . இட நெருக்கடியும் , பொருளாதார வசதியும் மிக முக்கிய காரணிகள்.பெரும்பாலும் தனி வீடு  அமைப்பவர்களுக்கே வாஸ்து விதி சாத்தியம். அடுக்கு மாடி வீடு மற்றும் வாடகை வீட்டில் குடி இருப்போர் இதை குழப்பி கொள்ள வேண்டாம்.

 வாஸ்து  இல்லா வீடு பாதிப்பா ?
     கண்டிப்பாக இல்லை.
 தூய்மையான ஆலயம்,அழகான அருவி ,ரம்மியமான ஏரி.....இவைகளை நாம் பார்க்காவிட்டாலும் வாழமுடியும்.அதைப் போல, இயற்க்கை விதியான வாஸ்து இல்லாத  வீட்டிலும்  வாழமுடியும்.

பரிகாரம் தேவையா ?
        தேவையே இல்லை.(இருந்தாலும் நம் மனது எதையாவது சையலேன்னா,அவ்வளவு சீக்கிரம் நிம்மதி பெறாது.எனவே சில ஐட்டங்களை கூறுகிறேன்.இது எல்லாம் சும்மா ஒரு மனோ ரீதியான விடயமே . தினமும்  ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பூ போடுவது.வாசலில் விளக்கு வைப்பது .பிரமிடு வைப்பது .சப்த ஓலி எழுப்பிகளை தொங்க விடுவது ........இன்னும் யோசிப்பாங்க ..?)

வாஸ்து முக்கிய விதிகள் என்ன ?

  • வடகிழக்கு (சனிமூலை) -ஹால்,போர்டிகோ ,கன்னி மூலையைவிட தாழ்வாக இருக்க வேண்டும்,பூஜை அறை . போர் போடலாம்.வெற்றிடம் விடலாம் .
  • தென்கிழக்கு (அக்னி) -சமையலறை. முடியாவிடில்  வாயு  மூலை.
  • வடமேற்கு (வாயு  மூலை)-படிப்பறை,சின்ன படுக்கை அறை
  • தென்மேற்கு (கன்னி மூலை)-பெரிய படுக்கை அறை ,கன்னி மூலை உயரமாக வேண்டும்,
  • வடக்கு - தளக்கூரை தாழ்வு,வெற்றிடம்  தென் மேற்கை விட அதிகமாக விடவும் 
  • கிழக்கு-  தளக்கூரை தாழ்வு ,வெற்றிடம் தென் மேற்கை விட அதிகமாக விடவும்
  • தெற்கு -கழிப்பறை ,படிக்கட்டு ,தளக்கூரை உயரம்
  • மேற்கு -கழிப்பறை ,படிக்கட்டு ,தளக்கூரை உயரம் 

----------------------------------முற்றும்-------------------------------------------அன்புடன்,  இனேஷ் ராஜா

13/09/2010

உலகப் பூ

உலகப் பூ
இந்த உலகப் பூ
ஒருநாள்
வெடித்து சிதறத் தான் போகிறது
சிதறிய பூக்களில் சிவந்த பூ ஒன்று
உன் காலடியில் விழுமேயானால்
அது என் இதயப் பூவாய்தான் இருக்கும் .
------------------------------------------------------யாரோ ஒரு இறந்த காதல் ஜோடியைப் பற்றி தினத்தந்தியில்  பத்து வருடங்களுக்கு முன் ஒரு செய்தி வந்தது.தன் காதலியோடு இறந்த ராஜ்குமார் என்பவரின் டைரியில் இருந்த கவிதை என  பிரசுரித்ததில் மனதில் ஆழமாக பதிந்த கவிதை.

30/08/2009

நன்றி இறைவா!

நன்றி  இறைவா!


கடவுளே! நான் பெற்ற ஓரு தோல்வி
பல வெற்றிகளை மறக்கச் செய்து விட்டதே!
என்ன ஓர் மாயை?
ஆம்
பால்ய பருவ ஆசைகளையும்
விடலை பருவ விருப்பங்களையும்
விறு  விறு  என அல்லாமல்
சீராக வழங்கியவன் நீ.


பத்தாம் வகுப்பில் ஆனேன்
முதல் மாணவன்
எட்டாம் வகுப்பில் மொத்தம் நூறை
எட்டாத மாணவன்
எப்படி மாறினேன்?!
சராசரி மாணவன்
சாதனை மாணவனானேன்,எப்படி?


பனிரென்டாம் வகுப்புதனில்
பத்திரமாய் படிக்கையிலே
பருவத்தின் மாறுதலினால்
பாழ் குழியில் வீழாமல்
பக்குவமாய் பாதுகாத்து
படிப்படியாய் அடுத்த படி
எடுத்து வைத்தேன்
எப்படி அது எப்படி?


கல்லூரி வாழ்க்கையிலே
எத்தனையோ காட்சிகள்.
கண்மூடி கண்திறந்தால்
நித்தம் வரும் காவியங்கள்
கற்பனையாய் போகுமெனத் தெரியாது
காளையாய் துள்ளித் துரிந்த போதிலும்
கால் இடரி விழவில்லை
கண்ணியமாய் எடுத்து வைத்தேன் அடுத்த படி
எப்படி அது எப்படி?


முதல் வேலை...
முதல் சம்பளம்...
வாங்கினேன்..இல்லை ..இல்லை
தந்தையினால் வாங்கப் பெற்றேன்.
அறிவின் தேடலும் ஆர்வக் கோளாறும்
சென்னையின் தூரத்தை துரத்தியது 
வாங்கிய சம்பள்ம்
உணவுக்கும் உறைவிடத்திற்கும் போதாத காலத்திலும்
உண்டாக்கியவருக்கு அனுப்பினேன்
அன்போடு வெறும் ஐனூறு ரூபாய்
பெற்றவர்கள் அதை எப்படி
பெற்றார்கள் எனத் தெரியாது
நான் அனுப்பியது ஏனோ?
என்றும் அனுப்பும் எண்ணம்
என்னுள்  நிரந்தரமாய் இருக்க நினைத்ததால்




தந்தையின் சோகராகத்தை
உண்மையில் உணர்ந்ததால்
உழைத்தேன்! உருகினேன்.
உண்டாக்கியவருக்கு
ஊதியம் நிறைய அனுப்ப
உற்றவனிடம் உண்மையில் வேண்டினேன்
அவனோ அனுப்பிய இடம்
அஸ்ஸாம்.


அஸ்ஸாம்
அருகில் ஒன்றும் இல்லை
ஆர்வமிகுதியாலும்
அப்பாவின் அதிக ஆசையினாலும்
அனுப்பி வைக்கப்பட்டேன்
அப்படியே அனுப்பினேன்
அத்தனை ஊதியத்தையும்
மறுபடியும் ஆசை ஊற்றெடுக்க
அனுப்பி வைக்கப்பட்டேன்
அடுத்த இடம் கத்தார்.


வாழ்வின் முதல் தோல்வி கண்ட இடம்
மூன்று மாதங்கள் எத்தனை எத்தனை
சோதனைகள்
ஏமாற்றப்பட்டேன் இல்லை
ஏமாந்துபோனேன்!
உண்ண உணவுக்கும் கஷ்டம்
என்னால் பிறருக்கும் கஷ்டம்
வேலை உண்டாம் விசா இல்லையாம்
விசா உண்டாம் வேலை இல்லையாம்
வேண்டாம் இந்த நாடு
செல்வோம் நம் வீடு,என்று
இல்லம் நோக்கி அழைத்தால்
பெற்றவர் பேசினார் அன்பாக
செத்தாலும் சா! இங்கு வராதே
வந்தால் அசிங்கமாம்

சிங்கமாய் இருந்தவனை
சில்லரையாய் நினைத்தவர்
சிரிக்க மட்டுமல்ல
சிந்திக்கவும் மறந்து விட்டார்
நான் அவர் செல்ல மகனென்று

அதன் பின் மாறியது
அந்த  இனிய உலகம், இருண்ட உலகமாய்

தோலில் போட்டு வளர்த்தவள்
அத்தான் என்று கூறியவள்
சென்றாள் சீக்கிரம்
படைத்தவனை நோக்கி
அன்பானவளின் முதல் இழப்பு.

வாழ விரும்பாதவன் தேர்வு செய்வது
வெருப்புடன் மரணத்தை
தமக்காக போகும் மரணத்தில் சுயநலம் உண்டு
ஏனோ என்னுள் இல்லை அது?
பொது நலம் வேண்டவே
போனேன் .......அதே  அஸ்ஸாம்
அப்பொழுதும் அனுப்பினேன்
அனைத்து பணத்தையும்



விடுமுறைக்கு செல்ல மனமில்லை
பெற்றவர் ஒருவரல்லவே
மற்றவரை பார்க்க மனம் துடித்தது
தாயைச் சிறந்த கோயிலுமில்லை!
அத்தனையையும் அள்ளிக் கொடுத்தும்
அழுதழுது அனுப்பி வைத்தார்

ஆம்,அத்தனையையும் பிடுங்கி விட்டு
அநாதை போல

உணர்ந்தேன் ஒன்று !
வாழ்வில் வெற்றி பெற திறமை மட்டும் போதாது
சந்தர்ப்பமும் வாய்க்க வேண்டுமென்று.

வரவே வேண்டாமென்று எண்ணிய
அதே கத்தார் என்னை மீண்டும்
வருக வருக என வரவேற்றது ஏனோ?

புரிகிறது
இப்பொழுது

எத்தனை தோல்விகள் தந்தாலும்
அத்தனையும் இன்று இனிப்பதற்கு காரணம்
தோல்வியின் வலியல்லவா?

வாடகைப் பணியாளன்
நேரடி ஊழியன்
பொறுப்பு நிறை வேலையாள் என
மூன்று இடங்கள்

விசா இல்லை
விருந்தாய் இரண்டு புதிய நாடுகள் பார்வைக்கு
விழுந்த தருணங்கள்
வீணான நிமிடங்கள்
விழுப்புண் சுவடுகள்

புதியதோர் பயணம்
புதிராய் கிழம்பியவன்
புதியவளைத் தேர்ந்தெடுத்தேன்
புன்னியவதியாய் வந்தாள்
புத்துயிர் தந்தாள்

பூமியும் வாய்க்கப் பெற்றேன்.


புதல்வனோ? புதல்வியோ?
இல்லை இரண்டுமோ
அச்சாரமிட்டுவிட்டேன்
ஆயிரம் கனவுகள்
ஆயிரம் ஊடல்கள்
அது ஒரு அன்பான் பயணம்

இத்தனையும் வாய்க்கப் பெற்றும்
இன்னுமோர் ஆசையென
இன்னுமின்னும் எத்தனைதான் ஆசைகள்
வேண்டாம் போதும்
பெற்றவனே... போதும் உம் ஆசைகள்
எல்லாம்
அவன் செயல்
அவனின்றி அணுவுமில்லை
ஆசைகள் ஆயிரமெனில்
அடங்காது நம் ஆத்மா
ஆண்டவனை நேசிப்பாய்
அன்றே
அருட்மோட்சம்

நன்றி இறைவா!

30/08/2008

என் அன்பின் அரசியே

என் அன்பின் அரசியே....
நீரில்லா இடம் பாலைவனமாம்
நீரில்லா இடமும் பாலைவனம்தான்....

உன் அன்பு வார்த்தைகள்
தினமும் காதில் விழுந்தாலும்
நீ அருகில் இல்லாத இரவுகள்
காகிதப் பூவைப் போல்தான்....
பார்க்கலாம் ஆனால் மணமில்லை
பருகலாம் ஆனால் சுவையில்லை
பேசலாம் ஆனால் அதில் ரசமில்லை
ஆம்
என்னதான் கிரகாம்பெல்லின் கண்டுபிடிப்பு
நமக்கு உதவினாலும்
தூரத்தின் பிரிவு
வலியும் வேதனையும் கலந்ததே.......

உன்னை அன்று நேசித்தேன்
ஆனால் இன்று நான்
என்னுள் உறைந்த
ஒன்றாகவே உணர்கின்றேன்.....

நம் பிரிவு நிரந்தரமில்லைதான்
ஆனால் இனியும் அது தொடருமாயின்
அதைத்  தாங்கும் வலிமை எமக்கு இல்லை
அறிவாயா ..........?!!!!!!!