03/05/2019

நீரின்றி வாழ்வேனா சொல்?--குறள்




நீரின்றி வாழாத நெற்பயிரைப் போல்நானும்
நீரின்றி வாழ்வேனா சொல்?

பற்றினை விட்டிடாப் பக்கிரி போல்நானும்
பற்றாது நிற்பேனோ சொல்?

பொய்யிலே வாழும் புலவனைப் போல்நானும்
பொய்யினைச் சொல்வேனா சொல்?!

வழிதவறிப் போகின்ற வாத்தினைப்
போல்நான்
குழியிலே வீழ்வேனா சொல்?!

✍️செ. இராசா

#மலையாளப்_பெண்பூவே



தனனானே தன்னானே
தனனானே தன்னானே
தனனானே தன்னா நன்ன நானே நானே
தனனானே நன்னா நன்ன நானே

#மலையாளப்_பெண்பூவே
விளையாடும் கண்மானே
உனைக்கான ஓடி வந்தேன் மானே நானும்
உனக்காக ஒடி வந்தேன் மானே

அழகான மீசையிலே
குரும்பான பார்வையிலே
எனைக்கான ஓடி வந்த மாமா நீயும்
எதற்காக ஓடி வந்தாய் மாமா

அடியாத்தி செண்பகமே
பிடிக்காதா?! என்முகமே
விழியாலே என்னைக் கொன்ற மானே உன்னால்
பழியாடாய் ஆகிப்போனேன் நானே

விடிவெள்ளிப் பேச்சாலே
வெடிக்காதே என்மாமா
தமிழாலே என்னை வென்ற மாமா உன்னால்
தனித்தீவாய் நானுமானேன் மாமா

✍️செ. இராசா

மரபை புதுக்கவிதை வடிவத்தில் சந்த நயத்தில் எழுதிய முயற்சி--குறள்



கடலில் கரைந்துள்ள கல்லுப்பாய் எந்தன்
உடலில் கரைந்தாயே நீ!

கவியில் கலந்துள்ள கற்பனையாய் எந்தன்
உயிரில் கலந்தாயே நீ!

மலரில் உறைந்துள்ள மாமணமாய் எந்தன்
உலகில் உறைந்தாயே நீ!

மதுவில் ஒளிந்துள்ள மாவிடமாய் இன்றென்
மதியை ஒளித்தாயே ஏன்?!

✍️செ. இராசா

(மரபை புதுக்கவிதை வடிவத்தில் சந்த நயத்தில் எழுதிய முயற்சி. இந்தப் படம் பார்த்ததால் தோன்றிய கவிதை இது)

#நான்கு_குறள்_வெண்பாக்கள்

02/05/2019

குறள்--தற்பெருமை

தற்பெருமை கொள்கின்ற தற்குறியாய் நில்லாமல்
கற்பதிலே ஆர்வத்தைக் காட்டு
✍️
தண்ணீரில் குளிப்பது
மீன்களுக்குத் தெரியாது

மீன்களின் மூக்கிற்கு...



மீன்களின் மூக்கிற்கு
.....ஜலதோசம் வருவதில்லை

மான்களின் கால்களுக்கு
.....ரீபாக்‌ஷூ தேவையில்லை

கழுகின் கண்களுக்கு
....காட்சியிலே பிழையில்லை

இலட்சிய மனிதனுக்கு
....கிட்டாதது எதுவுமில்லை

^^*****************************

✍️செ. இராசா

கவிஞனின் கற்பனைக்கு
....எப்போதும் எல்லையில்லை

#சேவலின்_துக்கம்



கொக்கொக்கென கொஞ்சியவள்
கோபித்துக் கொண்டாளா?!- இல்லை
பக்பக்கென பதுங்கியவள்
பலிவாங்கி விட்டாளா?!

கொடுஞ்செயல் செய்ததுயார்
கொக்கரித்துச் சொல்லிவிடு?!- நாளைக்
கொக்கரக்கோ எனும்போது
கோபத்தைக் கொட்டிவிடு!

#சேவலின்_துக்கம்

#குரங்கின்_குரல்(குறள்)



செவ்வாயில் நீர்தேடி செல்கின்ற உன்னை-நான்
எவ்வாறு திட்டலாம் சொல்!

மண்ணீரைச் சேர்க்காது மன்றாடும் உன்னை-நான்
என்சொல்லி திட்டலாம் சொல்!

புட்டியில் நீரடைத்து பூட்டிய உன்னை-நான்
பட்டியென திட்டிடவா சொல்!

#குரங்கின்_குரல்(குறள்)

குறிப்பு
******
பட்டி- நாய்

(இந்தக் குரங்கு, நாய் என்று திட்டுவது பிடிக்காவிடில் பக்கி என மாற்றிப் படியுங்கள்)

இளநீர்_குறள்




நீர்கொண்டு நிற்கின்ற நின்னுருவைக் காணுகையில்
யார்கைதான் பற்றாது சொல்!

#இது_இளநீர்_குறள்

பிற்சேர்க்கை
************


அறுவாள் எடுத்தே அறிபவனாய் என்னை
அறிந்திட வைத்ததும் நீர்

அகரம் அமுதன்--பிறந்தநாள் வாழ்த்துகள்--வெண்பா-12


வெண்பாப் புனைவதில் வித்தக வேந்தராம்
தன்பால் புகழாத் தனித்துவ- நண்பராம்
அன்பால் அணைத்த அகரம் அமுதனின்
பண்பால் மகிழ்கிறேன் நான்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே
💐💐💐💐💐💐