கண்ட இடம் சொர்க்கமென கண்மூடி உறங்குகின்றாய். சொந்த இடக் கவலையின்றி சுகமாக இருக்கின்றாய்.. எப்போது தேவையோ அப்போதே கொள்(ல்)கின்றாய் குப்பையில் பிறந்தாலும் குபேரனாய் வாழ்கின்றாய்..
நிறம் மாற்றி வந்து ஏமாற்றிய நரி கதை சொன்னால்...உருவத்தைப் பார்த்து ஏன் அடையாளம் கொள்ளவில்லை என்கிறாள் மகள். அவளுக்குத் தெரியுமா வெறும் மரு வைத்த MGR கதைகள்
என்ன பேசி என்ன ஆகும் எனக்கு ஒன்னும் புரியல! வெண்ணை நாயம் பேசிப்பேசி என்ன ஆகும் தெரியல! எந்த ஆட்சி நல்ல ஆட்சி எதுவும் இங்கே சரியில்ல! ஒன்னு போயி ஒன்னு வந்து ஒன்னும் இங்கே நடக்கல!
மாறி மாறி ஓட்டுப் போட்டும் மாற்றம் மட்டும் வரவில்லை! மாறி மாறி ஆண்ட போதும் மாற்றிக் கொள்ள நினைக்கல!
வெள்ளைக் காரன் போன போதும் கொள்ளை குணம் போகல..! என்ன சொல்லி என்ன செய்ய எங்க மக்கள் திருந்தல..!
கையக்கட்டி காலில் விழும் அடிமைக் குணம் போகல... திராவிடன்னா என்ன வென்று சரியா நமக்கு சொல்லல?!
✍️செ. இராசா
குறிப்பு:
சொற்களில் உள்ளது சூட்சமம் தமிழா விழித்தெழு...சொற்களைப் கொண்டே ஆள்கிறார்கள்...
(தமிழ்த்தாய் வாழ்த்தில்கூட முக்கியமான வரிகள் நீக்கப்பட்டுள்ளது)
.......இப்படி மாற்றி மாற்றி ஏன் சொன்னார்கள்?
பிரித்துப்பார்ப்பது தமிழனின் குணமல்ல. அனைத்து உறவுகளும் நம் சகோதர
உறவுகளே. ஆனால், வரலாற்றை திட்டமிட்டு மறைப்பது குற்றமே. தமிழனின்
உயரத்தைச் சொன்னவர்கள், தமிழனின் அரசியல் வீழ்ச்சியை மறைத்த காரணம் என்ன?! வீழ்த்தியவர்கள் தமிழரல்லாதவர்கள் என்பதாலா?!!