08/01/2023

பனமட்ட---- (ஒயிட்லகான்)

 


#பனமட்ட வலையொளித் தளம் 2 மில்லியன் உறுப்பினர்களைத் தொட்டதால் ஒரு பாடல் உடனே வேண்டுமென்று கேட்க சுடச்சுடக் கத்தாரில் எழுதி நண்பர் Singer Inba Kalil அவர்களால் உடனேயே சென்னையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
 
 
பன மட்டை சேனல் மாசு காட்டுது
அது ஃபாஸ்டு குரோத்து (Fast growth) அடைஞ்ச சேனல் ஆனது
பன மட்டை சேனல் மாசு காட்டுது
அது ஃபாஸ்டு குரோத்து அடைஞ்ச சேனல் ஆனது
ரெண்டு மில்லியன் சப்ஸ்க்ரைபர் தொட்டது
அதுக்கு உங்களோட ஒத்துழைப்பு கிடைச்சது...
ஹேய் டமுக்கு டுமுக்கு மகிழ்ச்சிடா
இதில் எல்லோருக்கும் நெகிழ்ச்சிடா
அட இன்னும் செய்ய வேணும்டா
அதைச் செய்யும் டீமு நாமடா....ஹோய்
 
 
பன மட்டை சேனல் மாசு காட்டுது
அது ஃபாஸ்டு குரோத்து அடைஞ்ச சேனல் ஆனது
 
 
மச்சான் மச்சான் மச்சான் மச்சான் ஞானம்
இந்த டாக்டர எங்கடா ரொம்ப நாளா காணோம்
மச்சான் மச்சான் மச்சான் மச்சான் ஞானம்
இந்த டாக்டர எங்கடா ரொம்ப நாளா காணோம்
பனமட்ட சேனலுடா பார்க்கும் பேரு ஜாஸ்தியடா
பார்த்த ஜனம் போகலடா....சந்தோசமா வாழுதடா
கிளினிக் எல்லாம் ஐயோ
கிளினிக் எல்லாம் காத்து வாங்கிக் கிடக்குது
அதுக்குக் காரணமே நம்ம சேனல் ஆனது
 
 
பன மட்டை சேனல் மாசு காட்டுது
 
 
சிட்டான் சிட்டான் சிட்டான் சிட்டான் ஜினுக்கு
அந்த சிங்கிலு சேனலில் சூப்பர் லிப்டு இருக்கு
சிட்டான் சிட்டான் சிட்டான் சிட்டான் ஜினுக்கு
அந்த சிங்கிலு சேனலில் சூப்பர் லிப்டு இருக்கு
சின்னச் சின்ன ஆளுங்கடா செய்யுறாங்க பாருங்கடா
கிடைக்கிற சான்சுல கிடாவெட்றத பாருங்கடா
கோடம்பாக்கம் யம்மாடி
கோடம்பாக்கம் இங்க வந்து கிடக்குது
எங்க ஆளுங்கள ஒன்னு ஒன்னா இழுக்குது
 
 
பன மட்டை சேனல் மாசு காட்டுது
 
 
வக்கிற வக்கிற வக்கிற வக்கிற ஷாட்டில்
அட நல்லது வந்திடும் பாருங்க நம்ம நாட்டில்
நாம....
வக்கிற வக்கிற வக்கிற வக்கிற ஷாட்டில்
அட நல்லது வந்திடும் பாருங்க நம்ம நாட்டில்
சொம்மா ஒன்னும் இல்லையடா குந்த நேரம் பத்தலடா
எல்லாருமே ஓடுறோம்டா இன்னும் வெல்ல பார்க்குறோம்டா...
எங்களோட நண்பரெல்லாம் டக்கரு
உங்க அன்புலதான் வெற்றிக்கொடி வந்தது
 
 
பன மட்டை சேனல் மாசு காட்டுது
அது ஃபாஸ்டு குரோத்து அடைஞ்ச சேனல் ஆனது
பன மட்டை சேனல் மாசு காட்டுது
அது ஃபாஸ்டு குரோத்து அடைஞ்ச சேனல் ஆனது
இரண்டு மில்லியன் சப்ஸ்க்ரைபர் தொட்டது
அதுக்கு உங்களோட ஒத்துழைப்பு கிடைச்சது...
ஹேய் டமுக்கு டுமுக்கு மகிழ்ச்சிடா
இதில் எல்லோருக்கும் நெகிழ்ச்சிடா
அட இன்னும் செய்ய வேண்டும்டா..
அதைச் செய்யும் டீமு நாமடா....ஹோய்
 
 
பன மட்டை சேனல் மாசு காட்டுது
அது ஃபாஸ்டு குரோத்து அடைஞ்ச சேனல் ஆனது
 
✍️செ. இராசா

06/01/2023

எப்போதுமே சந்தேகப்படுறா

 


எப்போதுமே சந்தேகப்படுறா-என்னை
எப்போதுமே சந்தேகப்படுறா
 
அழகா நானும் பொறக்கவில்லை
அசத்தும் பீட்டர் அறிவுமில்லை
இருக்கும் தொல்லை போதவில்லை
இதுக்குமேல தேவையில்லை
அப்போதுமே சந்தேகப்படுறா- அவ
எப்போதுமே சந்தேகப்படுறா...
 
ஆணாப் பொறந்த பாவத்துக்கு
அங்கே இங்கே ஓடி ஓடி
அப்பா வச்ச கடனடைக்க
சொந்த நாட்டை விட்டு ஓடி
அவளைக் கூட்டி பிள்ளை பெத்து
அதுகளுக்கா ஓடி ஓடி
நாளை எண்ணி நாளை எண்ணி
நாயாத் திரியும் என்னைப் பார்த்து
 
எப்போதுமே சந்தேகப்படுறா-என்னை
எப்போதுமே சந்தேகப்படுறா....
 
வுட்றா மச்சி பாத்துக்கலாம்...
✍️செ. இராசா

05/01/2023

குரங்கு

 


குரங்கு சேட்டை என்றும்
குரங்கு புத்தி என்றும்
குரங்கை வைத்தே ஏசுகிறோமே
குரங்கென்றால் அவ்வளவு மட்டமா?
 
யார் சொன்னார்கள்?
குரங்கை வைத்துதானே
வாயு புத்திரனென்று
வழி படுகின்றோம்..
 
ஆனால்....
குரங்கைப் பார்த்துதானே
கொரில்லாப் படையென்று
குழி பறிக்கின்றோம்..
 
எனில்
எத்தனையோ உயிர்களிருக்க
எதற்காக குரங்கின்மேல்மட்டும்
இத்தனை ஈர்ப்பு?
 
48 குரோமோசோமில் இருந்து
46 குரோமாசோமாக குறைந்தபோது
ஐந்தாம் அறிவுள்ள குரங்கு
ஆறாம் அறிவுள்ள மனிதனாக
உரு மாறியதே...
அது விந்தை முரணல்லவா?
 
இருந்தும்...
மலையில் இருக்கும்வரை
மானத்தோடு வாழ்ந்த குரங்கு
மலையடிவாரம் வந்தால்
மனிதனைப்போல் கையேந்துகிறதே..
அதுவும் முந்தை நரனல்லாவா?
 
இதிலிருந்தே தெரியவில்லையா?
இறங்கி வந்தால்
இயல்புநிலை மாறுமென்று...
எனில்...
இறங்கினால் எல்லாம் மாறுமா?
 
அதிலென்ன சந்தேகம்...
கால் நீண்டது..
வால் நீங்கியது..
முதுகு நிமிர்ந்தது..
மூளை வளர்ந்தது...
குரல் மொழிந்தது..
தரம் உயர்ந்தது...
 
இருந்தும்...
இந்த மனம் தான்
இன்னும் தாவிக்கொண்டே இருக்கிறது...
குரங்கைப் போலவே...
 
✍️செ. இராசா

04/01/2023

சின்னவரப் பார்க்க கூட்டம் கூடுது (ஒயிட்லகான்)

 


சின்னவரப் பார்க்க கூட்டம் கூடுது
அவரு வந்தாலே செம்ம சீனு ஆகுது
சின்னவரப் பார்க்க கூட்டம் கூடுது
அவரு வந்தாலே செம்ம சீனு ஆகுது
நம்மக் கலைஞரய்யா வந்தது போல் இருக்குது
அவர் பேரக் கேட்டா ஏனோ ஏனோ அதிருது...
ஹேய்...பாரு பாரு பாருடா
இது யாரு பெத்த பிள்ளைடா?
இவர் ஸ்டாலின் தந்த சிங்கம்டா
இவர் எங்க சின்னக் கலைஞர்டா
ஹோய் ஹோய்...
 
 சின்னவரப் பார்க்க கூட்டம் கூடுது
அவரு வந்தாலே செம்ம சீனு ஆகுது
 
மச்சான் மச்சான் மச்சான் மச்சான் ஞானம்- எதிர்
கட்சிங்க எங்கடா ரொம்ப நாளா காணோம்
மச்சான் மச்சான் மச்சான் மச்சான் ஞானம்- எதிர்
கட்சிங்க எங்கடா ரொம்ப நாளா காணோம்
ஸ்டாலினய்யா வந்தாருடா ரெண்டு பேரும் காணலடா...
உப்பு திண்ணப் பாவமடா தண்ணிகுடிக்க வேணும்டா
பொய்யா சொல்லி ஐயோ
பொய்யா சொல்லி ஆடு ஒன்னு சுத்துது
ஒன்னும் இல்லாமலே வாயில பூ சுத்துது
 
 சின்னவரப் பார்க்க கூட்டம் கூடுது
 
 சிட்டான் சிட்டான் சிட்டான் சிட்டான் ஜினுக்கு
அந்த சிங்கிலு செங்கலு அவரு போட்ட கணக்கு
சிட்டான் சிட்டான் சிட்டான் சிட்டான் ஜினுக்கு
அந்த சிங்கிலு செங்கலு அவரு போட்ட கணக்கு
அண்ணன் தந்த ஷாக்குலடா ஆடிப் போச்சு டெல்லியடா
தப்பு செஞ்ச கூட்டமடா தண்டனையும் வேணுமடா
கலைஞரோட நம்ம
கலைஞரோ வெற்றிக் கொடி பறக்குது
அந்த கூட்டோத்தோட பவுசு எல்லாம் முடிஞ்சது..
 
சின்னவரப் பார்க்க கூட்டம் கூடுது
 
எட்டடி எட்டடி எட்டடி எட்டடி பாஞ்சா
இவர் எட்டுற எட்டுல எதிரி கூட்டம் தொலஞ்சான்
தலைவர்...
எட்டடி எட்டடி எட்டடி எட்டடி பாஞ்சா
இவர் எட்டுற எட்டுல எதிரி கூட்டம் தொலஞ்சான்
நம்ம வீட்டுப் பிள்ளையடா பந்தா ஏதும் இல்லையடா
கெத்து கித்து காட்டலடா தேடி‌..வாரார் நம்மலடா
ஏன்டாயிது எதிரி கண்ண உறுத்துது
அவன் வயித்துலதான் பத்திக்கிட்டு எரியுது...
 
சின்னவரப் பார்க்க கூட்டம் கூடுது
அவரு வந்தாலே செம்ம சீனு ஆகுது
சின்னவரப் பார்க்க கூட்டம் கூடுது
அவரு வந்தாலே செம்ம சீனு ஆகுது
நம்மக் கலைஞரய்யா வந்தது போல் இருக்குது
அவர் பேரக் கேட்டா ஏனோ ஏனோ அதிருது...
ஹேய்...பாரு பாரு பாருடா
இது யாரு பெத்த பிள்ளைடா?
இவர் ஸ்டாலின் தந்த சிங்கம்டா
இவர் எங்க சின்னக் கலைஞர்டா
ஹோய் ஹோய்...
 
சின்னவரப் பார்க்க கூட்டம் கூடுது
அவரு வந்தாலே செம்ம சீனு ஆகுது
 
✍️செ. இராசா

02/01/2023

அண்ணா காட்டித்தந்த வழியே (வாடி பொட்டபுள்ள)


  

#மெட்டு: வாடி பொட்டபுள்ள
 

பல்லவி 

அண்ணா காட்டித்தந்த வழியே
நம் கட்சியினைக் கட்டிக்காக்கும் ஒளியே
அண்ணா காட்டித்தந்த வழியே
நம் கட்சியினைக் கட்டிக்காக்கும் ஒளியே

தீயா மின்னும் தலைவா
உன்னை மோதி வெல்ல எவன்யா?
இனி எல்லாத்திலும் வென்றிடுவோம்
கலைஞர்பேரக் காத்திடுவோம்

அண்ணா காட்டித்தந்த வழியே
நம் கட்சியினைக் கட்டிக்காக்கும் ஒளியே
அண்ணா காட்டித்தந்த வழியே
நம் கட்சியினைக் கட்டிக்காக்கும் ஒளியே

""""""""""""""""""""""""""""

சரணம்-1 

நம்ம கழகம் கட்டிக் காத்தத
கட்டாயம் மீறக்கூடாது
அத...தாண்டக் கூடாது கண்ணியம் தாண்டக் கூடாது...
புரியுதாய்யா

கடமை எதுன்னு தெரிஞ்ச பின்னாலே
தவறே செய்யக் கூடாது
கட்சிய மீறக்கூடாது பிறர்சொல் கேட்கக் கூடாது
ஆனைக்குந்தான் அடி சறுக்கும் கேப்புல
ஆனால் ஆனை என்றும் ஆனைதான்டா மாப்புள..

அதி காரம் இல்லா போதும்
ஐயா போலயிங்கு உழைச்சதாரு?
அதி காரம் வந்த போதும்
அட அப்போதும் உழைச்சதாரு?
 

துண்டு பல்லவி

அண்ணா காட்டித்தந்த வழியே
நம் கட்சியினைக் கட்டிக்காக்கும் ஒளியே
அண்ணா காட்டித்தந்த வழியே
நம் கட்சியினைக் கட்டிக்காக்கும் ஒளியே
 

சரணம்-2

தி..மு..காதான் சொன்னத செய்யும்
எப்போதும் செய்வத சொல்லும்
எனும் உண்மையுள்ளதால எப்போதும்
நம்மை நம்புறாங்க...

சுத்தம் ஆக காசே இல்லாம சும்மா
வே துடைக்கிற கூட்டம்
ஓ அடிக்கிற கூட்டம்
அம்மானு நடிக்கிற கூட்டம்
எல்லாத்தையும் சரிசெய்ய வேணும்
அத சரிசெய்ய தாமதம்தான் ஆகும்

அட அரசாங்கம் தந்திடும் முன்னே
யார் அரசியல் செய்யுறாங்க?
அட அரசாங்கம் செஞ்சிடும் அண்ணே.,
யார் அரசியல் செய்யுறாங்க?

✍️செ. இராசா

நூல்பல கல் ---- ஔவைத் திங்கள்- 23

 


நூல்பல கற்றால்தான் நுண்ணறிவு மேலோங்கி
ஆல்போல் விரியும் அறிவு.
(1)
 
தன்நிலை யாதென்று தானறிய வேண்டுமெனில்
பன்நோக்கில் கற்பாய் பல.
(2)
 
கிணற்றுத் தவளைபோல் கீழிருக்கும் மாந்தர்
கிணற்றைக் கடலென்பர் கேள்.
(3)
 
படிக்கப் படிக்க பயிலும் படிப்பு
படிக்காப் படிப்பு பல.
(4)
 
தான்பல கற்றாலும் தன்போக்கு மாறிவர
ஊன்றிப் படித்தால்தான் உண்டு.
(5)
 
நுனிப்புல்லை மேய்வதுபோல் நூல்களைக் கற்றால்
பனித்துளியாய் மாயும் பணிந்து.
(6)
 
கற்றிடக் கற்றிடக் கற்றிடும் ஆவலில்
கற்பவர் கற்கிறார் காண்.
(7)
 
மற்றவர்கள் நூல்சொல்லும் மாண்பினைக் கண்டறியார்
கற்றோர்முன் நிற்கும் கடுகு.
(8)
 
மற்றவர் நூல்சொல்லும் மாண்பினை உய்த்தறிந்தோர்
கற்றோர்முன் என்றும் கடல்.
(9)
 
என்றைக்கோ கற்றவை எப்போதோ கைகொடுக்கும்
என்றென்றும் கற்பாய் இசைந்து.
(10)
 
✍️செ. இராசா

31/12/2022

நான் டாடா பிர்லாவோட ஆளாய்யா? (ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரி)

 


(அந்தக் காலத்தில டாட்டா பிர்லா மாதிரி உள்ள பணக்காரங்களும், சாதியில் உயர்ந்த சாதின்னு சொல்றவுங்களுந்தான் படிக்க முடிஞ்சது. அதை மாத்துறதுக்குத்தான் திமுக உருவானது. அப்படி மாறி வந்த வரலாற்றை ஒரு சாதாரண தொண்டனின் மனநிலையில் பாடப்பட்ட பாடல் இது)
 
மெட்டு: ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரி
 
பல்லவி
 
நான் டாடா பிர்லாவோட ஆளாய்யா?
என் தாத்தா சாதாரண ஆளுயா..
அட...நான் டாடா பிர்லாவோட ஆளாய்யா?
என் தாத்தா சாதாரண ஆளுயா..
அட...மேல கீழ ஏதுமில்லை
கல்விகற்றா போதும்யா....
நான் டாடா பிர்லாவோட ஆளாயா?
என் தாத்தா சாதாரண ஆளுயா..
 
சரணம்-1
 
அண்ணாவால் அன்றைக்கு எல்லோரும் ஒன்றாக
கழகம் பிறந்திடுச்சே
அச்சாரம் போட்டாரு ஈவெரா பெரியாரு
அவரு நம்மூரு'"சே"
பிடிச்ச முயலுக்கு
மூனுகாலு என்பதுபோல்
மனித உறவுக்குள்
சாதிசொல்லி தீ வைக்க
நீரென திராவிட முன்னேற்றக் கழகம்
தீமையைப் பொசுக்கி சரித்திரம்படைச்சது..
நான் டாடா பிர்லாவோட ஆளாய்யா?
என் தாத்தா சாதாரண ஆளுயா..
அட...மேல கீழ ஏதுமில்லை
கல்விகற்றா போதும்யா
 
சரணம்-2 
 
நான் போறேன் முன்னால
நீ வாயா பின்னால
மெரினா கடற்கரைக்கு....
சொல்லாம சொன்னாரோ அண்ணாவும் அந்நாளில்
கலைஞர் ஐயாவுக்கு....
அடிச்ச அடியெல்லாம்
சிக்சரென செதருச்சு....
சிங்க நடைகண்டு
டெல்லிகூட பதறுச்சு....
எழுதும் வேகத்தில் எதிரிகள் அலற
வாழ்ந்தவரை அவர வெல்ல முடியல...
 
நான் டாடா பிர்லாவோட ஆளாய்யா?
ஹா ஆஅ ஆஅ
என் தாத்தா சாதாரண ஆளுயா..
அட...மேல கீழ ஏதுமில்லை
கல்விகற்றா போதும்யா
நான் டாடா பிர்லாவோட ஆளாய்யா?
என் தாத்தா சாதாரண ஆளுயா..
 
✍️செ. இராசா

தலைவரோட குணம் பாருங்கள் (இறைவனிடம் கையேந்துங்கள்)

 


தலைவரோட குணம் பாருங்கள்
அவர் தன்மை யார்க்கும் வருவதில்லை
எவரிடமும் கேட்டுப் பாருங்கள்
அவர் சொன்னசொல்லைத் தவறுவதில்லை
தலைவரோட குணம் பாருங்கள்
அவர் தன்மை யார்க்கும் வருவதில்லை
 
சொல்லை வீசி ஆளும் மனம் இல்லாதவன்
ஈடு இணை இல்லாத தலைமை ஆனவன்...
இன்னல் பட்டு அழும் முன்னே அங்குநிற்பவன்
ஏழைகளை வறியவரை பார்க்கின்றவன்...
தலைவரோட குணம் பாருங்கள்
அவர் தன்மை யார்க்கும் வருவதில்லை
 
திராவிடத்தை காப்பதற்குத் தன்னைத்தந்தவன்
ஆசை மாயை கொண்டவரைத் தள்ளிவைப்பவன்
பாசிசத்தை ஒன்றுமின்றி வேரறுப்பவன்
பாவிகளை உண்மையினால் மாய்க்கின்றவன்...
தொல்லைதரும் கயவர்கண்டு அசராதீர்கள்
அண்ணாதந்த பேரியக்கம் நம்பி நில்லுங்கள்
கலைஞர்போட்ட பாதையினைப் பற்றிச் செல்லுங்கள்
அன்புகாட்டும் தளபதியைப் நம்பிச் செல்லுங்கள்
தலைவரோட குணம் பாருங்கள்
அவர் தன்மை யார்க்கும் வருவதில்லை
 
தப்பு செய்ய நினைப்பவர்க்கு நஞ்சானவன்
கேடான மனிதருக்குத் தீயானவன்
சாடும் எதிரி திருந்திவிட்டால் தாயானவன்
நேர்மையோடு யாவரையும் நடத்துகின்றவன்
வலைவிரிக்கும் சிலர் வலையில் விழுகாதவன்
தலைவனாகி கோட்டை ஏறி ஆட்சி செய்வன்
உடன்பிறப்பாய் நம்மையெண்ணி ஓடி வருபவன்
கடமை எண்ணிக் கலைஞர் தந்த மஹா வல்லவன்.....
தலைவரோட குணம் பாருங்கள்
அவர் தன்மை யார்க்கும் வருவதில்லை
 
✍️செ. இராசா



29/12/2022

சுட்டுவச்ச மீனென்றால்

 


சுட்டுவச்ச மீனென்றால் சும்மா விடுவேனா?
பட்டுனு கிள்ளிப் படக்குனு- பிட்டெடுத்து
குப்பூசக்* கொண்டுவந்து கூட்டணி வச்சபடி
அப்படியே தள்ளுவேன் அஞ்சு!
 
(குப்பூஸ்- அரேபிய ரொட்டி) 
 
BARBEQ FISH 🐠

28/12/2022

காஃபியை அனுபவிச்சு குடிக்கிறவந்தான்..

 


ஊற்றுகின்ற சப்தத்தை
.... உள்வாங்கிக் கொண்டபடி
காற்று மணம்பரப்ப
....கைகளால்- ஏற்றியதன்
சூட்டை அனுபவித்தே
....சுர்ரென்(று) உறிஞ்சுகின்ற
காட்சியில் ஐம்புலனும்
...காண்!
 
✍️செ. இராசா
 
(காஃபியை அனுபவிச்சு குடிக்கிறவந்தான் இப்படிலாம் யோசிக்க முடியும். நான் கீழே உள்ள விளம்பரத்தைச் சொன்னேன்)