10/01/2023

கொங்கு நாட்டுக் கோட்டை

 


பாடல் ஒலிப்பதிவு இனிதே நடைபெற்றது....
பாடியவர்கள்:
இன்பக்கலில் & ZEE தமிழ் புகழ் ஷியாமலா
எழுதியவர்: செ. இராசமாணிக்கம்
இசையமைப்பாளர்: விஜய் சங்கர்
தயாரிப்பாளர்: அஜீத், கொங்கு மக்கள் முன்னணி 
 
**********
கொங்கு நாட்டுக் கோட்டை
இனிதான் எங்க வேட்டை
கொட்டு கும்மிப் பாட்டை
அதுதான் அடிக்கும் சாட்டை
காளிங்க ராயரு கொங்காள்வான் கவுண்டரு
எல்லோரும் வாழ்ந்த மண்ணு...
இப்போது என்னானோம் சொல்லு கண்ணு?
இப்போதே... ஒன்னாவோம் வந்து நில்லு...
 
ஏ...
இடிஇடிக்குது வெடிவெடிக்குது சும்மா வந்தாலே
படபடங்குது நடுநடுங்குது சொன்னா தன்னாலே
ஆறுமுகக் கவுண்டரவரு பேரைச் சொன்னாலே
பாரிலுள்ள படைநடுங்கும் போடு தில்லாலே
 
***********
வீராதி வீரன்
சூராதி சூரன்
தீராதி தீரன் சின்ன மலை!
பாராண்ட வம்சம்
பாசத்தின் அம்சம்
பாருங்க இப்போ என்ன நிலை?
 
வெள்ளைக் காரனையே வெளுத்தது போல
கொள்ளைக் காரங்கள விரட்டிட வாங்க...
முன்போல் நிம்மதியா வாழ்ந்திட நீங்க
கொங்கு மக்களோட முன்னணி வாங்க
 
இடிஇடிக்குது வெடிவெடிக்குது சும்மா வந்தாலே
படபடங்குது நடுநடுங்குது சொன்னா தன்னாலே
ஆறுமுகக் கவுண்டரவரு பேரைச் சொன்னாலே
பாரிலுள்ள படைநடுங்கும் போடு தில்லாலே
 
************
ஓடாநிலை கோட்டைகட்டி
ஒய்யாரமா வாழ்ந்த இனம்..
ஊரூரா கால்வாய்வெட்டி
வெள்ளாமை செய்த இனம்...
பொன்னரு சங்கரு தீரன்சின்ன மலை
வம்சமா வந்த சனம்
பழனி மண்ணோட மைந்தரு ஆறுமுக அண்ணன்
கவுண்டரும் கொங்கு இனம்..
 
கொட்டுங்க கொட்டுங்க கும்மியக் கொட்டுங்க
கும்மியக் கொட்டுங்கடி
கொட்டுங்க கொட்டுங்க கும்மியக் கொட்டுங்க
கும்மியக் கொட்டுங்கடி
 
*********
காங்கேயங் காளை
பாய்ந்தோடும் வேளை
மேலேறி நிற்கும் எங்க வீரம்!
கோட்டைகள் கட்டி
கால்வாய்கள் வெட்டி
ஊருக்காய் வாழும் நெஞ்சின் ஈரம்!
 
வள்ளல் சடையப்பர் வாழ்ந்தது போல
வாரி வழங்கிட நிமிருவோம் வாங்க...
கவுண்டர் யாரென்று காட்டிட நீங்க
புலிக்கொடி ஏந்திட புறப்பட்டு வாங்க
 
இடிஇடிக்குது வெடிவெடிக்குது சும்மா வந்தாலே
படபடங்குது நடுநடுங்குது சொன்னா தன்னாலே
ஆறுமுகக் கவுண்டரவரு பேரைச் சொன்னாலே
பாரிலுள்ள படைநடுங்கும் போடு தில்லாலே
 
✍️செ. இராசமாணிக்கம்

கலர்கலரா பிலிமு காட்டும் அண்ணாச்சி (வித விதமா சோப்பு சீப்பு)

 


மெட்டு: வித விதமா சோப்பு சீப்பு
 
*********
கலர்கலரா பிலிமு காட்டும் அண்ணாச்சி
உன் பப்பு எல்லாம் வேகாதெங்க முன்னாடி
எப்பவுமே கழகம் ஒரு முன்னோடி
அதை எதிர்த்துவந்தா போயிருவ பின்னாடி
நான் சும்மா ஒன்னும் சொல்லல
கை வெச்சே சொல்றேன் நெஞ்சில
நாங்க யாரையும் பார்த்தும் அஞ்சல
நீ எங்கள பேச யாருள?
சீனு சீனு சீனுடா (இனி) சீனு போட்டா சங்குடா
சீனு சீனு சீனுடா சீனு போட்டா சங்குடா 
 
துண்டு பல்லவி
******************
கலர்கலரா பிலிமு காட்டும் அண்ணாச்சி
உன் பப்பு எல்லாம் வேகாதெங்க முன்னாடி 
 
**********
பல நாள் போடுற வேஷம்
நேரம்வந்தாக்க அது வரும் தன்னால...
காலையில் எழுந்து குற்றம் சொல்லவேண்டி
கண்ணத் துலக்கி வச்சு நாளும் பார்க்குறான்
என்ன பார்த்தாலும் ஒன்னும் கிடைக்கல
என்ன செய்யலாம்னு கைய பிசையுறான்
அவன் கீழ பார்த்தான்..அட ஒன்னும் கிடைக்கல
அப்புறம்
சொம்மா சொம்மா பொய்யசொல்லி
சீனு போட்டுத் திரியிறான்
சீனு சீனு சீனுடா (இனி) சீனு போட்டா சங்குடா
சீனு சீனு சீனுடா சீனு போட்டா சங்குடா 
 
***********
சென்னை மாநகரிலே
மேயர் ஆனார் அன்றைக்கே.
கலைஞர் வழியினில் நல்லாட்சி செய்யும் எங்கள்
அண்ணா வழியினில் கட்சியினைக் கொண்டு செல்லும்
செய்யுற செயலால சிங்கம்போல ஏறிச்செல்லும்
ஸ்டாலின் ஐயாவின் ஆட்சியினைக் குத்தம் சொல்ல
நீ எல்லாம் ஆளா...?
போ பொழச்சு போயா...
ஆமாம்யா
சொம்மா சொம்மா பொய்யசொல்லி
சீனு போட்டுத் திரியிறான்
சீனு சீனு சீனுடா (இனி) சீனு போட்டா சங்குடா
சீனு சீனு சீனுடா சீனு போட்டா சங்குடா 
 
*********
கலர்கலரா பிலிமு காட்டும் அண்ணாச்சி 
 
செ. இராசா

09/01/2023

நல்லவன் யாரு? கெட்டவன் யாரு?

நல்லவன் யாரு? கெட்டவன் யாரு?
.....................நம்ப முடியல...!!!!
சில்லரை யாரு? சினேகிதன் யாரு?
....................ஒன்னும் புரியல...!!!!
 
நேரப்பார்த்தா நண்பேங்கிறான்..
தள்ளிப்போனா வம்பேங்கிறான்.
அள்ளித்தந்தா கர்ணங்கிறான்..
கிள்ளித்தந்தா கஞ்சங்கிறான்..‌
 
பழகப்பழகப் பாலு புளிக்கும் 
..........பழமொழிதாங்க!
பழகும்போது தெரிவதில்லை
...........அதுமட்டும் ஏங்க?
விலகவிலக வேசங்களையும்
...........வெளிப்படையாங்க!
விலகும்முன்னே தெரிவதில்லை
...........அதுமட்டும் ஏங்க?
 
✍️செ. இராசா

08/01/2023

சோம்பல் முறி ------- ஔவைத் திங்கள் 24

விழிகள் திறந்து விடியலைப் பார்ப்போர்
விழிமூட மாட்டார் விரைந்து
(1)
 
உறங்கும் தருணம் உறங்கா திருந்தால்
உறங்குவாய் பின்னர் உழன்று
(2)
 
பிறகு பிறகென்று பேசுகின்ற யாரும்
பிறகும் பிறகென்பர் பார்
(3)
 
அன்றன்று செய்வதை அன்றன்று செய்பவர்கள்
என்றைக்கும் முன்செல்வர் இங்கு
(4)
 
கொட்டாவி விட்டபடி கோபுரத்தைப் பார்ப்பவர்க்குக்
கிட்டுமிடம் எப்போதும் கீழ்
(5)
 
வாய்ப்பு வருமென்று வாசலையே பாராமல்
வாய்ப்பை உருவாக்க வா
(6)
 
என்னத்த என்போர்சொல் எப்போதும் கேளாமல்
முன்னோக்கிச் சென்றால் முதல்
(7)
 
ஓய்வெடுத்த பின்னாலும் ஓடத் தயங்கினால்
நோய்ப்பற்றும் என்றெண்ணி ஓடு
(8)
 
துடிப்புடன் இல்லாமல் சோர்வுடன் நின்றால்
படியேறிப் போவர் பலர்
(9)
 
வருகின்ற வாய்ப்பெல்லாம் வாழ்க்கையென எண்ணித்
தருவதை நன்றாகத் தா!
(10)
 
✍️செ. இராசா

பனமட்ட---- (ஒயிட்லகான்)

 


#பனமட்ட வலையொளித் தளம் 2 மில்லியன் உறுப்பினர்களைத் தொட்டதால் ஒரு பாடல் உடனே வேண்டுமென்று கேட்க சுடச்சுடக் கத்தாரில் எழுதி நண்பர் Singer Inba Kalil அவர்களால் உடனேயே சென்னையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
 
 
பன மட்டை சேனல் மாசு காட்டுது
அது ஃபாஸ்டு குரோத்து (Fast growth) அடைஞ்ச சேனல் ஆனது
பன மட்டை சேனல் மாசு காட்டுது
அது ஃபாஸ்டு குரோத்து அடைஞ்ச சேனல் ஆனது
ரெண்டு மில்லியன் சப்ஸ்க்ரைபர் தொட்டது
அதுக்கு உங்களோட ஒத்துழைப்பு கிடைச்சது...
ஹேய் டமுக்கு டுமுக்கு மகிழ்ச்சிடா
இதில் எல்லோருக்கும் நெகிழ்ச்சிடா
அட இன்னும் செய்ய வேணும்டா
அதைச் செய்யும் டீமு நாமடா....ஹோய்
 
 
பன மட்டை சேனல் மாசு காட்டுது
அது ஃபாஸ்டு குரோத்து அடைஞ்ச சேனல் ஆனது
 
 
மச்சான் மச்சான் மச்சான் மச்சான் ஞானம்
இந்த டாக்டர எங்கடா ரொம்ப நாளா காணோம்
மச்சான் மச்சான் மச்சான் மச்சான் ஞானம்
இந்த டாக்டர எங்கடா ரொம்ப நாளா காணோம்
பனமட்ட சேனலுடா பார்க்கும் பேரு ஜாஸ்தியடா
பார்த்த ஜனம் போகலடா....சந்தோசமா வாழுதடா
கிளினிக் எல்லாம் ஐயோ
கிளினிக் எல்லாம் காத்து வாங்கிக் கிடக்குது
அதுக்குக் காரணமே நம்ம சேனல் ஆனது
 
 
பன மட்டை சேனல் மாசு காட்டுது
 
 
சிட்டான் சிட்டான் சிட்டான் சிட்டான் ஜினுக்கு
அந்த சிங்கிலு சேனலில் சூப்பர் லிப்டு இருக்கு
சிட்டான் சிட்டான் சிட்டான் சிட்டான் ஜினுக்கு
அந்த சிங்கிலு சேனலில் சூப்பர் லிப்டு இருக்கு
சின்னச் சின்ன ஆளுங்கடா செய்யுறாங்க பாருங்கடா
கிடைக்கிற சான்சுல கிடாவெட்றத பாருங்கடா
கோடம்பாக்கம் யம்மாடி
கோடம்பாக்கம் இங்க வந்து கிடக்குது
எங்க ஆளுங்கள ஒன்னு ஒன்னா இழுக்குது
 
 
பன மட்டை சேனல் மாசு காட்டுது
 
 
வக்கிற வக்கிற வக்கிற வக்கிற ஷாட்டில்
அட நல்லது வந்திடும் பாருங்க நம்ம நாட்டில்
நாம....
வக்கிற வக்கிற வக்கிற வக்கிற ஷாட்டில்
அட நல்லது வந்திடும் பாருங்க நம்ம நாட்டில்
சொம்மா ஒன்னும் இல்லையடா குந்த நேரம் பத்தலடா
எல்லாருமே ஓடுறோம்டா இன்னும் வெல்ல பார்க்குறோம்டா...
எங்களோட நண்பரெல்லாம் டக்கரு
உங்க அன்புலதான் வெற்றிக்கொடி வந்தது
 
 
பன மட்டை சேனல் மாசு காட்டுது
அது ஃபாஸ்டு குரோத்து அடைஞ்ச சேனல் ஆனது
பன மட்டை சேனல் மாசு காட்டுது
அது ஃபாஸ்டு குரோத்து அடைஞ்ச சேனல் ஆனது
இரண்டு மில்லியன் சப்ஸ்க்ரைபர் தொட்டது
அதுக்கு உங்களோட ஒத்துழைப்பு கிடைச்சது...
ஹேய் டமுக்கு டுமுக்கு மகிழ்ச்சிடா
இதில் எல்லோருக்கும் நெகிழ்ச்சிடா
அட இன்னும் செய்ய வேண்டும்டா..
அதைச் செய்யும் டீமு நாமடா....ஹோய்
 
 
பன மட்டை சேனல் மாசு காட்டுது
அது ஃபாஸ்டு குரோத்து அடைஞ்ச சேனல் ஆனது
 
✍️செ. இராசா

06/01/2023

எப்போதுமே சந்தேகப்படுறா

 


எப்போதுமே சந்தேகப்படுறா-என்னை
எப்போதுமே சந்தேகப்படுறா
 
அழகா நானும் பொறக்கவில்லை
அசத்தும் பீட்டர் அறிவுமில்லை
இருக்கும் தொல்லை போதவில்லை
இதுக்குமேல தேவையில்லை
அப்போதுமே சந்தேகப்படுறா- அவ
எப்போதுமே சந்தேகப்படுறா...
 
ஆணாப் பொறந்த பாவத்துக்கு
அங்கே இங்கே ஓடி ஓடி
அப்பா வச்ச கடனடைக்க
சொந்த நாட்டை விட்டு ஓடி
அவளைக் கூட்டி பிள்ளை பெத்து
அதுகளுக்கா ஓடி ஓடி
நாளை எண்ணி நாளை எண்ணி
நாயாத் திரியும் என்னைப் பார்த்து
 
எப்போதுமே சந்தேகப்படுறா-என்னை
எப்போதுமே சந்தேகப்படுறா....
 
வுட்றா மச்சி பாத்துக்கலாம்...
✍️செ. இராசா

05/01/2023

குரங்கு

 


குரங்கு சேட்டை என்றும்
குரங்கு புத்தி என்றும்
குரங்கை வைத்தே ஏசுகிறோமே
குரங்கென்றால் அவ்வளவு மட்டமா?
 
யார் சொன்னார்கள்?
குரங்கை வைத்துதானே
வாயு புத்திரனென்று
வழி படுகின்றோம்..
 
ஆனால்....
குரங்கைப் பார்த்துதானே
கொரில்லாப் படையென்று
குழி பறிக்கின்றோம்..
 
எனில்
எத்தனையோ உயிர்களிருக்க
எதற்காக குரங்கின்மேல்மட்டும்
இத்தனை ஈர்ப்பு?
 
48 குரோமோசோமில் இருந்து
46 குரோமாசோமாக குறைந்தபோது
ஐந்தாம் அறிவுள்ள குரங்கு
ஆறாம் அறிவுள்ள மனிதனாக
உரு மாறியதே...
அது விந்தை முரணல்லவா?
 
இருந்தும்...
மலையில் இருக்கும்வரை
மானத்தோடு வாழ்ந்த குரங்கு
மலையடிவாரம் வந்தால்
மனிதனைப்போல் கையேந்துகிறதே..
அதுவும் முந்தை நரனல்லாவா?
 
இதிலிருந்தே தெரியவில்லையா?
இறங்கி வந்தால்
இயல்புநிலை மாறுமென்று...
எனில்...
இறங்கினால் எல்லாம் மாறுமா?
 
அதிலென்ன சந்தேகம்...
கால் நீண்டது..
வால் நீங்கியது..
முதுகு நிமிர்ந்தது..
மூளை வளர்ந்தது...
குரல் மொழிந்தது..
தரம் உயர்ந்தது...
 
இருந்தும்...
இந்த மனம் தான்
இன்னும் தாவிக்கொண்டே இருக்கிறது...
குரங்கைப் போலவே...
 
✍️செ. இராசா

04/01/2023

சின்னவரப் பார்க்க கூட்டம் கூடுது (ஒயிட்லகான்)

 


சின்னவரப் பார்க்க கூட்டம் கூடுது
அவரு வந்தாலே செம்ம சீனு ஆகுது
சின்னவரப் பார்க்க கூட்டம் கூடுது
அவரு வந்தாலே செம்ம சீனு ஆகுது
நம்மக் கலைஞரய்யா வந்தது போல் இருக்குது
அவர் பேரக் கேட்டா ஏனோ ஏனோ அதிருது...
ஹேய்...பாரு பாரு பாருடா
இது யாரு பெத்த பிள்ளைடா?
இவர் ஸ்டாலின் தந்த சிங்கம்டா
இவர் எங்க சின்னக் கலைஞர்டா
ஹோய் ஹோய்...
 
 சின்னவரப் பார்க்க கூட்டம் கூடுது
அவரு வந்தாலே செம்ம சீனு ஆகுது
 
மச்சான் மச்சான் மச்சான் மச்சான் ஞானம்- எதிர்
கட்சிங்க எங்கடா ரொம்ப நாளா காணோம்
மச்சான் மச்சான் மச்சான் மச்சான் ஞானம்- எதிர்
கட்சிங்க எங்கடா ரொம்ப நாளா காணோம்
ஸ்டாலினய்யா வந்தாருடா ரெண்டு பேரும் காணலடா...
உப்பு திண்ணப் பாவமடா தண்ணிகுடிக்க வேணும்டா
பொய்யா சொல்லி ஐயோ
பொய்யா சொல்லி ஆடு ஒன்னு சுத்துது
ஒன்னும் இல்லாமலே வாயில பூ சுத்துது
 
 சின்னவரப் பார்க்க கூட்டம் கூடுது
 
 சிட்டான் சிட்டான் சிட்டான் சிட்டான் ஜினுக்கு
அந்த சிங்கிலு செங்கலு அவரு போட்ட கணக்கு
சிட்டான் சிட்டான் சிட்டான் சிட்டான் ஜினுக்கு
அந்த சிங்கிலு செங்கலு அவரு போட்ட கணக்கு
அண்ணன் தந்த ஷாக்குலடா ஆடிப் போச்சு டெல்லியடா
தப்பு செஞ்ச கூட்டமடா தண்டனையும் வேணுமடா
கலைஞரோட நம்ம
கலைஞரோ வெற்றிக் கொடி பறக்குது
அந்த கூட்டோத்தோட பவுசு எல்லாம் முடிஞ்சது..
 
சின்னவரப் பார்க்க கூட்டம் கூடுது
 
எட்டடி எட்டடி எட்டடி எட்டடி பாஞ்சா
இவர் எட்டுற எட்டுல எதிரி கூட்டம் தொலஞ்சான்
தலைவர்...
எட்டடி எட்டடி எட்டடி எட்டடி பாஞ்சா
இவர் எட்டுற எட்டுல எதிரி கூட்டம் தொலஞ்சான்
நம்ம வீட்டுப் பிள்ளையடா பந்தா ஏதும் இல்லையடா
கெத்து கித்து காட்டலடா தேடி‌..வாரார் நம்மலடா
ஏன்டாயிது எதிரி கண்ண உறுத்துது
அவன் வயித்துலதான் பத்திக்கிட்டு எரியுது...
 
சின்னவரப் பார்க்க கூட்டம் கூடுது
அவரு வந்தாலே செம்ம சீனு ஆகுது
சின்னவரப் பார்க்க கூட்டம் கூடுது
அவரு வந்தாலே செம்ம சீனு ஆகுது
நம்மக் கலைஞரய்யா வந்தது போல் இருக்குது
அவர் பேரக் கேட்டா ஏனோ ஏனோ அதிருது...
ஹேய்...பாரு பாரு பாருடா
இது யாரு பெத்த பிள்ளைடா?
இவர் ஸ்டாலின் தந்த சிங்கம்டா
இவர் எங்க சின்னக் கலைஞர்டா
ஹோய் ஹோய்...
 
சின்னவரப் பார்க்க கூட்டம் கூடுது
அவரு வந்தாலே செம்ம சீனு ஆகுது
 
✍️செ. இராசா

02/01/2023

அண்ணா காட்டித்தந்த வழியே (வாடி பொட்டபுள்ள)


  

#மெட்டு: வாடி பொட்டபுள்ள
 

பல்லவி 

அண்ணா காட்டித்தந்த வழியே
நம் கட்சியினைக் கட்டிக்காக்கும் ஒளியே
அண்ணா காட்டித்தந்த வழியே
நம் கட்சியினைக் கட்டிக்காக்கும் ஒளியே

தீயா மின்னும் தலைவா
உன்னை மோதி வெல்ல எவன்யா?
இனி எல்லாத்திலும் வென்றிடுவோம்
கலைஞர்பேரக் காத்திடுவோம்

அண்ணா காட்டித்தந்த வழியே
நம் கட்சியினைக் கட்டிக்காக்கும் ஒளியே
அண்ணா காட்டித்தந்த வழியே
நம் கட்சியினைக் கட்டிக்காக்கும் ஒளியே

""""""""""""""""""""""""""""

சரணம்-1 

நம்ம கழகம் கட்டிக் காத்தத
கட்டாயம் மீறக்கூடாது
அத...தாண்டக் கூடாது கண்ணியம் தாண்டக் கூடாது...
புரியுதாய்யா

கடமை எதுன்னு தெரிஞ்ச பின்னாலே
தவறே செய்யக் கூடாது
கட்சிய மீறக்கூடாது பிறர்சொல் கேட்கக் கூடாது
ஆனைக்குந்தான் அடி சறுக்கும் கேப்புல
ஆனால் ஆனை என்றும் ஆனைதான்டா மாப்புள..

அதி காரம் இல்லா போதும்
ஐயா போலயிங்கு உழைச்சதாரு?
அதி காரம் வந்த போதும்
அட அப்போதும் உழைச்சதாரு?
 

துண்டு பல்லவி

அண்ணா காட்டித்தந்த வழியே
நம் கட்சியினைக் கட்டிக்காக்கும் ஒளியே
அண்ணா காட்டித்தந்த வழியே
நம் கட்சியினைக் கட்டிக்காக்கும் ஒளியே
 

சரணம்-2

தி..மு..காதான் சொன்னத செய்யும்
எப்போதும் செய்வத சொல்லும்
எனும் உண்மையுள்ளதால எப்போதும்
நம்மை நம்புறாங்க...

சுத்தம் ஆக காசே இல்லாம சும்மா
வே துடைக்கிற கூட்டம்
ஓ அடிக்கிற கூட்டம்
அம்மானு நடிக்கிற கூட்டம்
எல்லாத்தையும் சரிசெய்ய வேணும்
அத சரிசெய்ய தாமதம்தான் ஆகும்

அட அரசாங்கம் தந்திடும் முன்னே
யார் அரசியல் செய்யுறாங்க?
அட அரசாங்கம் செஞ்சிடும் அண்ணே.,
யார் அரசியல் செய்யுறாங்க?

✍️செ. இராசா

நூல்பல கல் ---- ஔவைத் திங்கள்- 23

 


நூல்பல கற்றால்தான் நுண்ணறிவு மேலோங்கி
ஆல்போல் விரியும் அறிவு.
(1)
 
தன்நிலை யாதென்று தானறிய வேண்டுமெனில்
பன்நோக்கில் கற்பாய் பல.
(2)
 
கிணற்றுத் தவளைபோல் கீழிருக்கும் மாந்தர்
கிணற்றைக் கடலென்பர் கேள்.
(3)
 
படிக்கப் படிக்க பயிலும் படிப்பு
படிக்காப் படிப்பு பல.
(4)
 
தான்பல கற்றாலும் தன்போக்கு மாறிவர
ஊன்றிப் படித்தால்தான் உண்டு.
(5)
 
நுனிப்புல்லை மேய்வதுபோல் நூல்களைக் கற்றால்
பனித்துளியாய் மாயும் பணிந்து.
(6)
 
கற்றிடக் கற்றிடக் கற்றிடும் ஆவலில்
கற்பவர் கற்கிறார் காண்.
(7)
 
மற்றவர்கள் நூல்சொல்லும் மாண்பினைக் கண்டறியார்
கற்றோர்முன் நிற்கும் கடுகு.
(8)
 
மற்றவர் நூல்சொல்லும் மாண்பினை உய்த்தறிந்தோர்
கற்றோர்முன் என்றும் கடல்.
(9)
 
என்றைக்கோ கற்றவை எப்போதோ கைகொடுக்கும்
என்றென்றும் கற்பாய் இசைந்து.
(10)
 
✍️செ. இராசா