ஹேய்
வந்தாச்சு புது வருசம்- அடடா
புது மாற்றம் ஒன்னு செய்யப் போறோம்
எதிர் காலமெங்கேக் காட்டப் போறோம் (2)
வருசம் போனா வயசு கொறையுமா
சத்தியமா கொறையாது தம்பி
அட
சாதி மதம் பெரிசில்லைப்பா...
எல்லோரும் ஒன்னேதான் அம்பி
வந்தாச்சு புது வருசம்- அடடா
புது மாற்றம் ஒன்னு செய்யப் போறோம்
எதிர் காலத்த காட்டப் போறோம்
நம் நட்புக்குள் ஒருபோதும் சண்டைல்லாம் கிடையாது
அதுதானே வேண்டுமப்பா..
புகை இருந்தாலும் ஒருபோதும் தீயாக மாறாது
அண்ணனின் கூட்டமப்பா...
நம் நட்புக்குள் ஒருபோதும் சண்டைல்லாம் கிடையாது
அதுதானே வேண்டுமப்பா..
புகை இருந்தாலும் ஒருபோதும் தீயாக மாறாது
ராஜாவின் கூட்டமப்பா...
காலம் வரும்பார் புகழோடு
பொறுப்பா முறையா நடைபோடு
புதுசு புதுசா கனவோடு
துணிஞ்சு நடந்தா வரலாறு
அடி தூளாக் கொடுப்போம் பலநூறு
இனி இதுதான் டார்கெட் விளையாடு...
வந்தாச்சு நியூ இயரு அடடா புது மாற்றம் ஒன்னு செய்யப் போறோம்
எதிர் காலத்த காட்டப் போறோம்
கண்டக்டர் எல்லாரும் சூப்பர் ஸ்டார் ஆனதுபோல் சரித்திரம் இல்லையிங்க
இறைவன் கண்பட்டா எல்லாரும் கலக்கல் ஸ்டார் ஆவாங்க
நான் கண்டு கொண்டதுங்க (2)
நாங்க கொடுக்கும் ரீல்ஸ்சு எல்லாம்
ஓடக்காரணம் நீங்க தானுங்க
நீங்க கொடுக்கும் லைக்ஸ்சு எல்லாம்
மேலும் எங்கள ஓட வைக்குங்க
அன்ப வாரிக் கொடுத்தது
நீங்கதானுங்க
நாங்க வாழக் காரணம் நீங்க தாங்க
ஏய் வந்தாச்சு நியூ இயரு அடடா
புது மாற்றம் ஒன்னும் பொறந்தாச்சு
எதிர் காலம் அடி தூளாச்சு
வருசம் போனா வயசு கொறையுமா
சத்தியமா கொறையாது தம்பி
அட போன வருஷம் திரும்ப வருமா
ஒரு போதும் வராதுங்க தம்பி
No comments:
Post a Comment