25/01/2025

சீச்சீ யாருஇவ சீ

 

(திடீரென்று புகழ்பெற்ற ஒரியா மொழிப் பாடல் மெட்டுக்கு நான் தமிழில் எழுதியது. இதேபோல் நம் பாட்டும் என்றாவது ஒருநாள் புகழ் பெறாமலாப் போய்விடும் என்கிற தன்னம்பிக்கையை ஊட்டிய பாடல்)

சீச்சீ யாருஇவ சீ
சீச்சீ யாருஇவ தேவை யில்லை சீ

சொந்தபந்தத்துல பொண்ணு கிடைக்கல இவளை கட்டிக்கிட்டேன்.. (2)
நெஞ்சாங்கூட்டுல தேவதை போலவே இவளை வச்சிருந்தேன்...
வர வர பின்னே சரியில்லைன்னாக்க
என்னத்த செய்ய இனி- என்
அன்பை உதறிப் போனபின்னே
என்னத்த சொல்ல இனி
சீச்சீ சீசீ
சீச்சீ யாருஇவ சீ
சீச்சீ யாருஇவ தேவை யில்லை சீ

எள்ளுனு சொன்னாக்க
எண்ணைய்யா மாறியே
என்னையத் தந்திடுவேன்..
என்னங்க என்றாக்க
என்னன்னு கேட்காம
முன்னால வந்திடுவேன்...

என்னஇப்படி பொம்பள பின்னே
திறியிறான் இவன்சொல்?
ஏன்தான்இப்படி பொம்பளே பின்னே
மயங்குறான் இவன் சொல்?
இப்படியெல்லாம் ஊருக்குள்ள எத்தனை எத்தனை பேச்சு....
ஆனால் நானும் கேட்கலையே
அதுவே பலிச்சு போச்சு...
சீச்சீ சீசீ
சீச்சீ யாருஇவ சீ
சீச்சீ யாருஇவ தேவை யில்லை சீ

✍️செ. இராசா 

No comments: