(மலையாள நாட்டுப்புறப்பாட்டின் தாக்கத்தில் ஒரு பாடல் பிறந்தது)
..........எம்மாமன் பொண்ணே
கண்ணுக்குள்ள நிக்கிறியே
கட்டாத முத்துமல்லியே-
............உம்மாமந்தானே
கட்டிக் கொண்டாத் தப்பில்லையே-அடி
கட்டிக் கொண்டாத் தப்பில்லையே..
சிக்காத செவலைக்குட்டியே
.........எம்மாமன் பொண்ணே
செல்லு க்குள்ள சிரிக்கிறியே
இக்கால ரம்பைரதியே
.........உம்மாமங்கிட்ட
எட்டிப் போகாம் பட்டில்லையே-அடி
எட்டிப் போகாம் பட்டில்லையே...
மைசூரு சுந்தரியே
....எம்மாமன் பொண்ணே
மதுவைப் போல மயக்குறியே
நைசாத்தான் நழுவுறியே
.....உம்மாமங்கைய
வைக்கு முன்னே வெலகுறீயே- அடி
வைக்கு முன்னே வெலகுறீயே..
No comments:
Post a Comment