20/01/2025

மெட்டு: உச்சி வகுந்தெடுத்து----(பாலியல் வன்முறைக்கு எதிரான ஓர் பாடல்)

No photo description available.
(பாலியல் வன்முறைக்கு எதிரான ஓர் பாடல்....அரசு சார்பான நிகழ்வு என்பதால் அதையும் நினைவுகூர்ந்து எழுதப்பட்டது)
பெத்து வளர்த்தெடுக்க
பட்டது கொஞ்சமில்ல
நாலெழுத்துப் படிக்கவச்சா நல்லதுன்னு சொன்னாக
நல்லதுன்னு நினைச்சதிப்போத்
தப்பாகப் போயிடுச்சோ....(2)
ஆரீராரோ ஆரீராரோ ....
ஆரீராரோஆரீராரோ ஆரீராரோ...
கண்ணுல எண்ணை ஊத்தி
கவனமாகப் பார்த்தாலும்
காவாலிக் கூட்டிமிங்கே திரியுதுங்க...
பெத்தவங்க நெஞ்சமெல்லாம் பதறுதுங்க..
அடப் பொட்டப் புள்ள நிம்மதியா வரணுமுங்க...
பெத்து வளர்த்தெடுக்க
பட்டது கொஞ்சமில்ல
நாலெழுத்துப் படிக்கவச்சா நல்லதுன்னு சொன்னாக...
கெட்டப் பயலுகளைக் கேக்காம விட்டாக்க
பிள்ளைங்க படிப்பதெப்போ சொல்லுங்க
தட்டுக்கெட்ட இவனுகளை தட்டிக்கேட்க
அட நம்மவிட்டா யாருஇங்கே நியாயங்கேட்க
பெண்களுக்கு பாதுகாப்பு
உள்ளயிடம் தமிழ்நாடு
அப்படித்தான் எல்லோருமே சொன்னாங்க
சொன்னவுக சொன்னதுபோல் காப்பாத்த
அட ஒற்றுமையா கைகோர்த்து நிப்போங்க...


No comments: