12/01/2025

தவறென்ன செய்தேன்

 



தவறென்ன செய்தேன்
........ தவிப்பில் திரிந்தேன்!
தவமென்ன செய்தே
........தவிர்ப்பேன்!- கவனமாய்
ஊன்றிப் புகுவேன்!
........உயர்வை அடைந்திடுவேன்!
சான்றாய் இருப்பேன்!
.........தனித்து!

மன்னிக்க மாட்டாயா
..... மைந்தனாய் வேண்டுகிறேன்!
நன்றி மறவாத
......நட்பாவேன்- என்றைக்கும்
எண்ணம்சொல் செய்கையால்
.....எல்லோர்க்கும் ஆனவரை
நன்மை விளைவிப்பேன்
.....நான்!

No comments: