நண்பர் Rajkumar Mallan அவர்கள் மகளின் மறைவிற்கு எம் மனமார்ந்த ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 


தூக்கி வளர்த்தமக
.....தூரமாப் போயிடுச்சே
தீக்கி இரையாகி
......சேர்ந்திடுச்சே- சீக்கிரமே
தூக்கிக் கொடுத்திடவா
......தோல்மேல ஏத்திவச்சோம்
யார்க்குமே வேண்டாம்
......இது!
நாசாவ நீபார்க்க
....நாள்கணக்கா நின்னுநின்னு
காசாக் கொடுத்துத்தான்
...காணவச்சார்- ஆசானாய்
நித்தமும் நாட்டியமாய்
...நீச்சல் பயிற்சியுமாய்
எத்தனை எத்தனை
....ஏன்?
பொத்தி வளர்த்தமகப்
....போகுறதப் பார்த்திடவா
நித்தம் தவமிருந்து
....நேர்ந்துவந்தோம்- சத்தியமாய்
மொத்த உறவிருந்தும்
....மூத்தமகள் அன்பைப்போல்
ஒத்த உறவெங்கே
....உண்டு?
செ. இராசா
(என்ன சொன்னாலும் என்ன எழுதினாலும் மனம் ஏற்க மறுக்கிறது மகளே.....மிகுந்த வலியுடன் அழுகிறோம்...போய்வா...

)



தூக்கி வளர்த்தமக
.....தூரமாப் போயிடுச்சே
தீக்கி இரையாகி
......சேர்ந்திடுச்சே- சீக்கிரமே
தூக்கிக் கொடுத்திடவா
......தோல்மேல ஏத்திவச்சோம்
யார்க்குமே வேண்டாம்
......இது!
நாசாவ நீபார்க்க
....நாள்கணக்கா நின்னுநின்னு
காசாக் கொடுத்துத்தான்
...காணவச்சார்- ஆசானாய்
நித்தமும் நாட்டியமாய்
...நீச்சல் பயிற்சியுமாய்
எத்தனை எத்தனை
....ஏன்?
பொத்தி வளர்த்தமகப்
....போகுறதப் பார்த்திடவா
நித்தம் தவமிருந்து
....நேர்ந்துவந்தோம்- சத்தியமாய்
மொத்த உறவிருந்தும்
....மூத்தமகள் அன்பைப்போல்
ஒத்த உறவெங்கே
....உண்டு?

(என்ன சொன்னாலும் என்ன எழுதினாலும் மனம் ஏற்க மறுக்கிறது மகளே.....மிகுந்த வலியுடன் அழுகிறோம்...போய்வா...



No comments:
Post a Comment