21/01/2025

எதிர்பார்ப்பே இல்லாமல்

 


எதிர்பார்ப்பே இல்லாமல்
....எப்போதும் வாழத்தான்
.........எல்லோரும் சொல்லுகின்றார்!
எதிர்பாரா சங்கடங்கள்
.....எப்போதும் வந்ததெனில்
..........என்னவென சொல்லவருவார்?
அதிகாரம் வந்தவுடன்
....அத்தனையும் மாறுமென
........ஆதரவாய்ப் பேசிவருவார்!
அதி-காரம் கொண்டவராய்
.... ஆட்சிக்கு வந்தவுடன்
.........ஆவதில்லை என்றுவருவார்!
✍️செ. இராசா

No comments: