29/01/2025

யாரைக் குறையென்பேன் சகியே

 


யாரைக் குறையென்பேன் சகியே
யாவிலும் குறைகளுண்டோ?!
ஊரேக் குறையென்றால் சகியே
ஊரிலே நாமுமுண்டோ?!!
இன்று விளைவதெல்லாம் சகியே
என்றோ விதைத்ததன்றோ?
நன்மை விளைவதெல்லாம் சகியே
நம்வினை விளைவன்றோ?
காலம் கடக்குதடி சகியே
காரணம் புரியலையோ?
ஞாலம் சுழலுதடி சகியே
நாட்களும் நகருதன்றோ?!
நேற்று முடிந்ததடி சகியே
நேர்ந்தது பிறக்குதன்றோ?
மாற்றம் வருகுதடி சகியே
மாறிட வருவாயோ.....
✍️செ. இராசா

No comments: