என்னைநானே மாற்றவில்லை
....யாரைநானும் மாற்றுவேன்?!
நன்மைதீமை ஆயவில்லை
....நச்சைநானே நம்பினேன்!
என்னைநானே வெல்லவில்லை
உன்னைவீணே எள்ளவில்லை
....உண்மைதேடச் சொல்கிறேன்!
கர்மநோவை எண்ணியெண்ணி
...காலவேந்தைக் கேட்கிறேன்!
அர்த்தவாழ்வை வாழயென்னை
...ஆக்கநேரம் வல்லையோ?!
கர்ப்பமாகத் தோன்றுமுன்னே
...காக்கவைத்த காலனே....
மர்மமாகக் காக்கவைத்தல்
...மாயவேந்தன் மாயையோ?!
No comments:
Post a Comment