08/01/2025

அலட்சியம் செய்கின்ற

அலட்சியம் செய்கின்ற
.......அற்பசிறு புல்லர்களை
அப்படியே களைந்து விடுவாய்!
இலட்சியம் என்னவென
.......எப்போதும் எண்ணங்களை
ஏர்முனைபோல் தீட்டி வைப்பாய்!
உலகமே ஏற்றாலும்
.......ஒத்துவரா பித்தர்களும்
உள்ளரென நினைந்து நடப்பாய்!
இலட்சமே தந்தாலும்
.......ஏற்பில்லா மாந்தர்களை
என்றைக்கும் ஏற்க மறுப்பாய்!

No comments: