வெட்டருவா மீசை
மாமன்கூட பேச
எங்கவூரு பொண்ணுக்கெல்லாம் ஆசை
ஏ மிய்யா மிய்யா மிய்யா மிய்யா பூனை...
மண்ணுல புதைஞ்சிருக்குது சங்ககாலப் பானை..
ஏ நீயும் நானும் நானும் நீயும் ஒன்னா
அந்தப் பானையில பொங்கல வைப்போம் ஃபன்னா....
விடியற்காலை பொங்கல் வைப்போம்
விடியல் தந்த ஒளியை மதிப்போம்
சொந்தம் பந்தம் எல்லாம் இணைஞ்சு
படையல் போட்டா இனிக்கும் விருந்து
(2)
ஒருநாள் வீட்டுக்கு மறுநாள் மாட்டுக்கு
படையல் போடும்
பொங்கல் திருநாள்
இயற்கை இறைவன் எதுவோ அதுக்கு
நன்றி சொல்லும் அன்புப் பெருநாள்
தரணி ஆண்ட தமிழர் திருநாள்
சங்ககாலம் தொட்டு
எங்ககாலம் வரைக்கும்
எல்லோருமே கொண்டாடுவோம் பொங்கல்
ஏலேலோ....
ஜல்லிக்கட்டு காளை
துள்ளுவதைப் போல
சந்தோசமாக் கொண்டாடுவோம் பொங்கல்
No comments:
Post a Comment