பனை மட்டைப் பசங்களடா
பாக்க சொல்ல குழந்தைங்கடா
நடிக்க சொல்ல வந்து நின்னா தெறிக்குன்டா
இதுதாங்க பனமட்ட கூட்டம் - இவுங்க
வந்தாலே மறப்பீங்க கஷ்டம் (2)
மீசக்காரங்க வரைஞ்ச மீசைக்காரங்க
மாசப் பாருங்க எங்க மாசப் பாருங்க (2)
வாரி வாரி வழங்குறாரு
வாழும்போதே உதவுறாரு
ராஜா அண்ணன் மனசப்பாருங்க
ஜல்லிக்கட்டுக் காளைபோல
துள்ளிக்கிட்டுப் போக நாங்கக்
காரணமே அவருதானுங்க...(2)
நாலு காசு வருகுதுன்னு
கவர்ச்சி காட்டும் கூட்டமுண்டு
தர்ம வழியில் நடக்கனுன்னு
நம்மச் சேனல் கொள்கையுண்டு...(2)
அன்பால இணைஞ்சோங்க ஒன்னா அன்று...
அதனால ஜெயிச்சோங்க தனியா இன்று...(2)
எல்லோர்க்கும் பொதுவான சேனல்- நம்போல்
எளியோர்க்கும் இருக்காதோ தேடல் (2)
மீசக்காரங்க வரைஞ்ச மீசைக்காரங்க
மாசப் பாருங்க எங்க மாசப் பாருங்க (2)
(தன்னன்ன தனனா....)
ஏறு ஏறு ஏறுமுகம்
லைக்சு வந்தால் மாறும் முகம்
மக்கள் மனசு தங்கம் தானுங்க
காலம் நேரம் மாறிவிடும்
சொந்த பந்தம் நோகடிக்கும்
எங்கள் சேனல் கவலை விரட்டுங்க (2)
தொல்லை கொடுக்கும் உலகமுங்க
நாளும் கடந்து போகனுங்க
அதுக்கு சிரிக்க வேணுமுங்க
நாங்க இருக்கோம் பார்த்துக்குங்க...
பனமட்ட என்றாலே கலக்கலுங்க
உங்கள்
ஆதரவு இருந்தாலே போதுமுங்க...(2)
எல்லோர்க்கும் பொதுவான சேனல்- நம்போல்
எளியோர்க்கும் இருக்காதோ தேடல் (2)
மீசக்காரங்க வரைஞ்ச மீசைக்காரங்க
மாசப் பாருங்க எங்க மாசப் பாருங்க (2)
பனை மட்டைப் பசங்களடா
பாக்க சொல்ல குழந்தைங்கடா
நடிக்க சொல்ல வந்து நின்னா தெறிக்குன்டா
சண்டை கிண்டை போடமாட்டோம்
கண்ட தேதும் பேச மாட்டோம்
ராஜா அண்ணன் டேக்கு சொன்னா
பறப்போன்டா...(2)
.........,..........
No comments:
Post a Comment