08/03/2022

இதழகள் வெண்பாக்கள் (உதடுகள் ஒட்டாது குவியாது)

 #இதழகள்_வெண்பாக்கள்
#உதடுகள்_ஒட்டாது_குவியாது

(ம-ப-வ மற்றும் உ-ஊ-ஒ-ஓ-ஔ இனங்கள் வராது)

உ,ஊ,ஒ,ஓ,ஔ உயிர்களுடன்,
ப், ம், வ் மெய்களும் சேர்ந்து 8
ப்,ம்,வ் x 12 உயிர்கள் உறழ்ந்து 36
உ,ஊ,ஒ,ஓ,ஔ x 15மெய்யுடன்
உறழ்ந்து,(ப்,ம்,வ் நீங்கலாக) 75
ஆக 119.

இறையின் செயலாய் இசைந்திடக் கற்றே
நிறைநிலை என்றாகி நில்
(1)

கண்ணில் தெரிகின்ற காட்சிகள்; சட்டெனக்
கண்டிட கானல்நீர் காண்
(2)

கற்றாரைக் கற்றாரே கல்லாராய்க் காண்கையில்
கற்றிடார் கண்டிலார் கண்
(3)

ஆராய்ந் தறிந்த அரிய நிசத்தை
ஆராய்தல் நன்றா அறி!
(4)

எண்ணியதை நெஞ்சார எண்ணுகிற திண்ணியரைக்
கண்ணியராய்க் கண்டிடலாம் கேள்! 
(5)

No comments: