#தமிழால்_முடியும் (ஒரு பள்ளி மாணவருக்காக)
தமிழைத்
 தாய் மொழியாகக் கொண்டோருக்கும், தமிழ்வழிக் கல்விபயின்று தலைநிமிர்ந்து 
நிற்போருக்கும், தமிழ் வெறும் மொழியல்ல அது வாழ்வின் மூச்சென்றே என்னும் 
தமிழ் சான்றோர்களுக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டு என் 
கன்னித்தமிழ் உரையை உங்கள்முன் வழங்குகிறேன்.
இங்கே நமக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு "தமிழால் முடியும்"
ஆமாம், தமிழால் என்ன முடியும்?
தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா?
தமிழ் படித்தால் பொருளீட்ட முடியுமா?
தமிழ் எதற்காக படிக்க வேண்டும்? 
இப்படி
 நிறைய கேள்விகள், சமுகத்தின் எல்லா தரப்பு மக்களிடமும் வைக்கப்படுகிறது. 
ஒருவேளை இந்தக் கேள்விகளில் ஏதோ நியாயம் இருப்பதுபோல்தான் 
பெரும்பாலானோருக்குத் தென்படுகிறது. ஆனால், நாம் கூர்ந்து ஆராய்ந்தால், 
இக்கூற்று முற்றிலும் தவறே என்பதை உணரலாம்.
ஆம்...இங்கே யாரும் மற்ற
 மொழிகளைப் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. எத்தனை மொழிகள் முடியுமோ 
அத்தனை மொழிகளையும் பயிலுங்கள். ஆனால் தமிழ்மொழியைத் தெளிவாகப் பயின்று 
அதனை வாழ்வியலின் முக்கிய அங்கமாக மாற்றுங்கள் என்றே சொல்ல வருகின்றேன்.
ஒருமுறை
 லியோ டால்ஸ்டாயிடம் நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியவர்கள் எழுதிய 
கடிதத்தில் "கெட்டது செய்வோர்க்கும் நல்லது செய்யும்" கருத்தை எங்கிருந்து 
பெற்றீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கவர் அது உங்கள் தென்னிந்திய மொழியான 
தமிழ்மொழியில் உள்ள "திருக்குறள்" என்னும் ஒப்பற்ற நூலில் இருந்துதான் 
என்று கூறியுள்ளார். மகாத்மாவிற்கோ ஆச்சரியம் அடங்கவில்லை. உடனே, 
திருக்குறளைத்தேடி படித்தார். அந்தக்குறளை வாசித்தார். அந்தக்குறள் 
என்னவென்று சொல்லுங்கள் பாப்போம்....
ஆம்...
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண 
நன்னயம் செய்து விடல்  
அதாவது,
 துன்பம் தந்தவருக்கு, அவர் நாணும் அளவிற்கு நன்மை செய் என்று 2000  
ஆண்டுகளுக்கு முன் நம் முப்பாட்டனார்  திருவள்ளுவர் கூறிய வரிகளையே தம் 
வாழ்வியல் இலட்சியமாக்கி மிகப்பெரிய சாம்ராஜ்யம் செய்த ஆங்கிலேயரை அகிம்சை 
என்னும் ஆயுதத்தால் வென்று காட்டினார் நம் தேசப்பிதா. அதுமட்டுமல்ல, இந்தத்
 திருக்குறளைப் பயில்வதற்காக அடுத்த பிறவி என்ற ஒன்று இருக்குமாயின் 
தமிழனாக பிறக்க ஆசைப்படுகின்றேன் என்றும் கூறியுள்ளார். காரணம், எந்த ஒரு 
நூலையும் சுவைக்க, அந்தந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாயே அதனை 
முழுமையாக ருசிக்க முடியும். மற்றவர்கள் மேலோட்டமாக அறியலாம். அவ்வளவே... 
இப்போது சொல்லுங்கள் தமிழால் முடியுமா? முடியாதா? 
இன்று
 வரையிலும் ஜப்பானியர்கள், சீனர்கள்...தன் தாய் மொழியில்தான் 
படிக்கிறார்கள், சிந்திக்கிறார்கள். அதனால் தான் அவர்களால் நிறைய 
கண்டுபிடிப்புகளை இந்த உலகிற்குக் கொடுப்பதாக உலக அறிஞர்கள் 
ஒத்துக்கொள்கிறார்கள்.
மேலும் படிப்பு என்பது வெறும் பணம் 
சம்பாதிக்கத்தானா? இல்லையே...அதையும் தாண்டி "வாழ்க்கை ஒரு வாழும் கலை" என 
வாழ்வதற்காகத் தானே...அதையெல்லாம் அறிய நாம் சங்க இலக்கியங்களைப் பயில 
வேண்டாமா? நாம் எவ்வளவு பெரிய பாக்கியவான்களாக இருந்திருந்தால் 
தமிழர்களாய்ப் பிறந்திருப்போம். நமக்கிருக்கும் இலக்கியங்கள் போல் வேறு 
எந்த மொழியில் உள்ளது சொல்லுங்கள்?. 
இதை உணர்ந்ததால்தான், தமிழக 
அரசு, தமிழில் படிப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு நிறைய சலுகைகளை 
வழங்கிவருகிறது. ஆம்...இனி தமிழில் படித்தால் எல்லாம் கிடைக்கும். 
படியுங்கள் தமிழ்! 
சிந்தியுங்கள் தமிழில்.....தமிழால் எல்லாம் முடியும் என்று கூறி...வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன். 
நன்றி! நன்றி!! நன்றி!!!

No comments:
Post a Comment