நாமெழுதும் ஓர்பதிவு 
    நாடெங்கும் செல்வதற்கு 
....நாமென்ன ஆளுமையா இங்கே?
கோமானாய் வாழ்வோரின்
    கூற்றுதான் செல்லுமெனில் 
...கூட்டத்தில் கூவனுமா இங்கே?
யாமென்ன செய்தாலும் 
   ஏறெடுத்தும் பாரார்முன் 
...யாமென்ன செய்கின்றோம் இங்கே?
ஆமென்றே தோன்றுகின்ற 
   ஐயமுள்ள கேள்விகளை   
..ஆராய்ந்து பார்ப்போமா இங்கே......!!!
கோரிக்கை மூன்றெழுதி 
   கோமகனின் பார்வைபடக்    
...கோட்டைக்கு மின்னஞ்சல் போட்டேன்!
பாரிலுள்ளோர் யாரேனும் 
   பார்த்திடவும் வேண்டுமென்று 
...பக்கத்தில் என்சுவற்றில் வைத்தேன்!
ஊரிலுள்ள நல்லோரில் 
   ஊடகத்து நட்பொருவர் 
...உள்ளுரையைத் தன்னுரையில் சேர்த்தார்!
யாருக்குப் போகணுமா 
   எவ்வழியில் சேரணுமோ 
..எப்படியோ அப்பதிவைச் சேர்த்தார்!
இப்படித்தான் நேற்றைக்கும் 
    ஏற்றிவிட்ட ஓர்பதிவில்   
....என்தலைப்பை மற்றொருவர் போட்டார்!
தப்பாகக் கையாண்டார் 
     என்றெல்லாம் சொல்லவில்லை 
.....தன்குரலை அப்பதிவில் போட்டார்!
இப்படித்தான் இங்குபலர் 
     நம்பதிவைப் பார்த்தாலும் 
....எப்போதும் முன்மொழிய மாட்டார்!
தப்பில்லை ஆளுமைகள் 
    அப்படித்தான் என்றெண்ணி 
....செப்புவோரும் வீண்போக மாட்டார்!
செ. இராசா
No comments:
Post a Comment