கதையா? கவிதையா?
எதாயிருந்தால் என்ன?
கழுதைகளின் தேவை
காகிதம்தான்!
கடவுளா? கவர்ச்சியா?
எதாயிருந்தால் என்ன?
மாடுகளின் தேவை
சுவரொட்டிதான்!
தமிழா? ஆங்கிலமா?
எதாயிருந்தால் என்ன?
கடைகளின் தேவை
பொட்டலம்போடத்தான்!
டப்பாவிலா? ரோலரிலா?
எங்கேயிருந்தால் என்ன?
கழிப்பறையின் தேவை
துடைத்தெறியத்தான்!
செ. இராசா
(தயவுகூர்ந்து கவிதையாய் மட்டும் பார்க்க வேண்டுகிறேன்)
No comments:
Post a Comment