21/03/2022

முதலானவன் தொடரானவன் முடிவானவன் அவனே!

 


முதலானவன் தொடரானவன் முடிவானவன் அவனே!
இதமானவன் இகமானவன் இறையானவன் அவனே!
பதமானவன் பொருளானவன்  பலவானவன் அவனே!
மதமானவன் மனமானவன் மணமானவன் அவனே!
 
கணமானவன் கனமானவன் கனிவானவன் அவனே!
குணமானவன் குலமானவன் குருவானவன் அவனே!
கனவானவன் நனவானவன் கலையானவன் அவனே!
புனலானவன் அனலானவன் புரியாதவன் அவனே!
 
✍️செ. இராசா

No comments: