#பறையிசைப்_பாடல்
#தமிழரிசை
சாமிக்குள் என்னடா சாதி? - நீ
சாதிச்ச தென்னடா மோதி- நீர்
கொட்டியே சாவதா நீதி- பறை
கொட்டியே சொல்லடா சேதி....
தாய்வழி தானடா ஆதி- உயர்
தாழ்வுகள் காட்டவா சேரி- நீ
சாதிக்கத் தேவையா சாதி- இச்
சாதிக்கு வையடா தீ...தீ...தீ..தீ...தீ...தீ
இசையில் கூடவா பிரிவு- தமிழ்
இசையே எந்தன் உறவு- பறை
இசைக்குள் இருக்கும் சிறப்பு- அதை
இசைக்கப் பிறக்கும் சிலிர்ப்பு! பூ..பூ..பூ
பறை பறை பறை
பறை அதைப் பறை
முறை முறை முறை
முறை இதென் முறை
சிறை சிறை சிறை
சிறை அதை உடை
குறை களைக் களை
நிறை களை உரை
ஆம்....
குறிஞ்சிப்பறை முல்லைப்பறை
மருதப்பறை நெய்தல்பறை பாலைப்பறை
அரிப்பறை ஆறெறிப்பறை
வெற்றிப்பறை வெறியாட்டுப்பறை
வெருப்பறை வெட்டியான்பறை
குரும்பறை குறவைப்பறை
கோட்பறை கொடுகொட்டிப்பறை
சாப்பறை சாக்காட்டுப்பறை
தலைப்பறை தமுக்குப்பறை
தொண்டகப்பறை சூசிகப்பறை
பம்பைப்பறை பன்றிப்பறை
திடும் திண்டிமம் தண்ணம் தம்பட்டம்
தக்கை தப்பட்டை திமிலை படலை
முரசம் நசாளம் பண்டார மேளம்
தக்களி மத்தளி கரடிகை தாளம் காகளம் வீராணம்........
டன்டனக்கு டனக்குனக்கு
டன்டனக்கு டனக்குனக்கு
டன்டனக்கு டனக்குனக்கு
டன்டனக்கு டனக்குனக்கு டா. (2)
எட்டிவச்சா பகையெதுக்கு
எட்டிவிடா தடையெதுக்கு
கட்டிவச்சா சரியுனக்கு
கட்டறுத்தா சரியெனக்கு
கொட்டடிச்சா குறையுனக்கு
கொட்டடியே நிறையெனக்கு
தப்படிச்சா தவறுனக்கு
தப்படிதான் சரியெனக்கு..... டா
#சாதிகள்_இல்லையடி_ஆத்தா
No comments:
Post a Comment