சாதி மதமென்றச்
............சார்பினை விட்டுவிட்(டு)
ஆதித் தமிழினத்தை
............ஆள்கின்ற- ஏதிலாரைக்
கண்டுக் களையெடுத்துக்
............கையோங்கும் நன்நாளில்
பண்பாட்டுப் பொங்கலிட்டுப் பாடு!
போக்கி அழிப்பதைப்
.......போகியெனக் கொண்டாடி
ஆக்கிய நெல்லில்
.......அனைத்துமி- நீக்கியபின்
பொங்கலோப் பொங்கலெனப்
.......பொங்கிவரும் வேளையில்
சங்கை முழங்குவதேச் சான்று!
மாட்டைக் குளிப்பாட்டி
.....மஞ்சளெல்லாம் கொம்பிலிட்டு
நாட்டுப்பெண் போலே
.......நளினமாய்க்- கூட்டிவந்து
வீட்டுத் தொழுவம்முன்
.......வெல்லமிட்டப் பொங்கலிட்டு
காட்டிடுவோம் அன்பைக் கனிந்து!
செ. இராசா
14/01/2022
பொங்கலோப் பொங்கலென
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment