16/03/2026

நன்றி இறைவா

 

நட்பென்று வந்தாய்!
.....நகைந்தாட வைத்தாய்!
.....மனமார்ந்த நன்றி இறைவா!
கிட்டாத தெல்லாம்
.....கிடைத்தறிய வைத்தாய்!
.....சிரம்தாழ்ந்த நன்றி இறைவா!
எட்டாத இன்பம்
....எமையுணர வைத்தாய்!
.....இனிதான நன்றி இறைவா!
சட்டென்றே ஓர்நாள்
.....சகமுணர வைப்பாய்!
.....அதற்கின்றே நன்றி இறைவா!

✍️செ. இராசா

No comments: