நீயே எனக்குத் துணையாவாய்
தீயே எனக்குள் ஒளியானாய்
நீரே எனக்குள் சுவையானாய்
வெளி வளி நிலமதில் கருவானாய்
ஒலி மணம் உணர்வென உருவானாய்
ஆ....ஆ.....ஆ ..
நீயே எனக்குத் துணையாவாய்
ஞானமும் நீயே ஞாலமும் நீயே
வானமும் நீயே வண்ணமும் நீயே
தேகமும் நீயே தேவையும் நீயே
ராகமும் நீயே தாளமும் நீயே
பாடலும் தேடலும்
பைந்தமிழ் பாக்களும்
தோற்றமும் மாற்றமும்
தோன்றிடும் யாவிலும்
நீயே நீயே...நீயே நீயே
நீயே எனக்குத் துணையாவாய்
No comments:
Post a Comment