அதைஇதை எழுதாமல்
எதைஎதை எழுதனுமோ
அதைஅதைத்தான் எழுதனும்னு
எதையுமே எழுதாம இருப்பதற்கு
எதையாவது எழுதுவுமேன்னு
இதையிப்ப எழுதுறேன்...
எதை எழுதினாலும்
அதைக் கண்டுக்காதவுங்க
இதைப்பத்தி ஏதாவது சொன்னா
அதையும் பெரிசுபடுத்தாம
இதையாவது பார்த்தாங்களேன்னு
அதையும் கடந்து போவேன்...
இதைச் சொல்லனும்னு நினைச்சேன்
அதை அப்படியே சொல்லிட்டேன்
இதை ஏத்துக்கிட்டா நன்றி..
இதை ஏத்துகாட்டியும் நன்றி..
No comments:
Post a Comment