உறையூர் வெக்காளியம்மனை மனதார வேண்டிவிட்டு அப்படியே வயலூர் முருகன் கோவில் சென்று வந்தோம். இரண்டு கோவில்களிலுமே மிகவும் அற்புதமான தரிசனம் கிடைத்தது. குறிப்பாக வயலூர் முருகன் கோவிலில் சாமிகும்பிட்டுவிட்டு வெளியே வந்தால் யாரென்றே தெரியாத ஒரு கல்யாண மாப்பிள்ளை எங்களைக் கூட்டிக் கொண்டுபோய் சாப்பாடு போட்டார். தெரிந்தவர்களுக்குப் போடுவது வேறு. யாரென்றே தெரியாதவர்களை அழைத்து விருந்தோம்பல் செய்வதெல்லாம் நம் பாரம்பரியத்தில் இன்னும் இருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது. (மொய் அன்பளிப்புகூட வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). மாப்பிள்ளை மணப்பாறையைச் சேர்ந்தவராம். தீவிர சிவ பக்தர். அருள் தொண்டில் மனம் மகிழும் அற்புத நபர். அவர் எல்லாம் வளமும் பெற்று நீடூழி வாழ மனமார வாழ்த்துகிறேன்.
நீங்களும் வாழ்த்துங்கள் உறவுகளே...
வாழ்க பல்லாண்டு!






No comments:
Post a Comment