விருது விருது விருது
கொடுக்குறாங்க விருது
வருது வருது வருது
நீ வந்தா...இங்கே விருது
கூட்டம் சேர்க்க கூப்பாடு போட்டு
கூவிக்கூவி குடுப்பாங்க விருது
நாட்டம் காட்டி நம்மோட ஆளு
வாரமானா வருவாங்க பாரு
எதுக்கு எதுக்கு எதுக்கு- இந்த
பொழப்பு எல்லாம் எதுக்கு?
ஒதுக்கு ஒதுக்கு ஒதுக்கு- உன்னை
செதுக்க நேரம் ஒதுக்கு!
அப்பப் பாரு உன்னோட விருது
உன்னைத் தேடி ஓடோடி வருது!
அப்பக்கூட இல்லைன்னா விருது
விருது என்ன.........ன்னு கருது!
செ. இராசா
No comments:
Post a Comment