முதன்மை நிறங்களில்
முக்கிய நிறமெனினும்;
நீலத்தை மட்டும்
மூன்றாம் நிறமென்பது
முற்றிலும் நிற அரசியலே...
(RGB)
எத்தனை நிறங்கள்
இங்கே இருந்தாலும்;
நீலத்தைமட்டும் சேர்த்து
நீலத் திரைப்படமென்பது
ஆபாசம்தரும் அருவெறுப்பே...
ஒன்று தெரியுமா?!
ஒவ்வொரு கோளுக்கும்
ஒவ்வொரு நிறமிருக்க
பூமிக்கு மட்டும்தான்
நீலநிறக் கோளென்ற
சிறப்புப் பெயர்!
இவ்வளவு ஏன்?
நீலவண்ணக் கண்ணாவென்றும்
நீலகண்டப் பெருமானென்றும்
கடவுள்களில்கூட நிறபேதமில்லை...
ஆனால்..
இந்த மனிதர்களில்தான்...
இன்னும்..
நீல மென்றால் அது பேதம்...
அட..
தேசியக்கொடியின் சக்கரம்கூட
நீல நிறம்தான்
ஆனால்...
கட்சிக்கொடிகளில் வரும் நீலம்தான்
கண்களை உறுத்துகிறது...
நீங்கள் என்னதான் கூறினாலும்
நீல வைரம் தான் மதிப்புமிக்கது...
நீலத் திமிங்கலம்தான் மிகப்பெரியது
நீல வானம்தான் மிக உயர்ந்தது
நீலக் கடல்தான் மிகப் பரந்தது...
ஆம்..
நீலம் நிரந்தரம்;
நீல நிறம் தரம்!
ஆயினும்...
நீலத்தைக் குறியீடாக்கி
சாதியத்தை பேசுவது
பா'ர்க்க ரஞ்சிதமாய் இல்லை!
போதும் பிரம்மாக்களே...
நிற அரசியலை விடுங்கள்...!!!
நிஜ அரசியலைத் தொடுங்கள்...!!!
செ. இராசா
16/05/2024
நீலம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment